Skip to main content

Posts

Showing posts from July, 2010

மறந்து போ!

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை... நேற்றுப் பெய்த நிலவு உனக்கானதாகவே இருந்துவிட்டுப் போகட்டும். கொஞ்சமாய் சிரிக்க வேண்டியிருக்கிறது... இப்போதைக்கு என்னிலிருந்து மறந்து போ! யாரும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை! . . .

வாழ்க்கையைத் தொலைத்தவள்!

என் வீட்டின் எதிர் சந்தியில் எழுதிவிட்டுப்போன உன் பெயரின்  இறுதி எழுத்துக்களை  யாரோ ஒருவரின்  வெற்றிலைத் துப்பல்  நிறம் சேர்க்கிறது. முதுகுத் தண்டில் நீ நகத்தால் கீறுகிறாய். வழமை போலவே  திரும்பிப் பார்க்க  தனிமை,  தனிமை,  மற்றும் தனிமை மட்டுமே! உனது இல்லாமை - என்னைத் தவிர  எல்லோருக்கும் செய்தியான  அந்திமப்பொழுதின் அணைப்பிலிருந்து வெளியே வர  என்னை நீ அனுமதிப்பதில்லை. பெருங்காய டப்பாவுக்குள் எனக்குத் தெரியாமலே வாழ்க்கையை ஒழித்து வைத்து, மறைந்து விட்டாய். டப்பாவை மறந்தும் விட்டாய்! முன் வீட்டு அக்காவின் பச்சைக் குழந்தை போல, பகடைக் காயாக என்னை உருட்டி உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது  காதல்! . . .

ஜாதிகள்!

ஜாதிகள் உண்டு பாரதியாரே! எடுப்பவன் மற்றும் கொடுப்பவன்! . . .

நனைக்கும் மௌனம் !

நிலவை ஏமாற்ற  போர்வைக்குள் ஒளிந்து கொண்டேன். சிறு தூறலாக ஆரம்பித்து, சற்றைக்கெல்லாம் என்னை மொத்தமாக நனைத்து விட்டது உன் மௌனம்! . . .

என் தோட்டத்து அழகி

மல்லிகைப் பூவுக்கும், நித்திய கல்யாணிக்கும், செவ்வந்திப் பூவுக்கும், ஏன் ரோஜாவுக்கும் கூடத் தெரியாது பெண்ணே. நான் இப்படி கட்சி மாறுவேன் என்று! . . .

உச்சந்தலை முத்தம்

நாட்குறிப்பேட்டின் தாள்களுக்குள் மையுடன் கசிகிறது- உன் உச்சந்தலைக்கான என் முத்தமும், ஒரு சில கண்ணீர்த் துளிகளும்... . . .

ஆசைத் தூண்டில் போட்டு...

சேற்றை வாரி இறைத்தவள் நீ. ஓரமாய் நின்று தேம்பியழுதது வாழ்க்கை. ஒவ்வொரு முறையும் தவறி விழும் போதும் அடுத்த முறை சிகரம் தேடும் பீனிக்ஸ் பிறவி நான். உன் துரோகங்கள் என்னைப் பாதிக்காது!. ஆசைத் தூண்டில் போட்டு ஏமாற்றச் சுறாக்களைத்தான் இப்போதும் அள்ளுகிறேன். அதிரசம், ஐஸ் கிரீம், குலாப்ஜாமூன் கூட்டத்திற்குள் பாகற்காயாக வாழ்கிறேன். கசப்பேன். ஒரு கணம் தனிலும் கேடு விளையேன்! . . .

காதலின் மகத்துவம்

பூக்கள் தேனைப் பொழிவது படைப்பின் மகத்துவம். இங்கே... தேன்துளி ஒன்று புன்னகைப் பூக்களை சொரிவது காதலின் மகத்துவமோ? மோகனத் தென்றல் வீசும் என்னவளை நினைக்கையில் உள்ளம் தீப்பற்றி உணர்வுகளின் வெப்பம் தாழாது என் உதடுகளில் கூட வியர்வைப் பூக்கள் எட்டிப் பார்க்கின்றதே! பச்சை, சிவப்பு, நீலம், கறுப்பென நிறங்கள் பலவாய் இருக்கலாம் . என் நெஞ்சில் நிறுவப்பட்ட காதல் ஒன்று தான். காதலி நீ மட்டும் தான்! . . .

அசிங்கங்களின் பட்டியல் !

அசிங்கங்களின் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள். அசிங்கங்கள் எப்பொழுதும், அழகின் முடிவில்,  அழகினை முடித்து, ஆரம்பிக்கின்றன. முதலிரவில்  என் முதல் புணர்வில் அழகானவைக்குள் விழுந்து அசிங்கத்தில் விழித்துத் தெளிந்தேன்.... அழகுகள் எப்பொழுதும் அசிங்கத்தில் முடிகிறது! அசிங்கங்கள் பற்றித்தான்  ஆராய்ச்சி தேவை. இங்குள்ள எல்லாமே  அழகாக நினைத்துக் கொள்ளும்  அசிங்கங்கள் தான்.  நான், நீ.... அசிங்கங்களின் பட்டியலில்... அழகு - ஓவியம், அசிங்கம் - சிற்பம். அழகு - புள்ளி, அசிங்கம் - வட்டம். அழகிடம் அசிங்கம்  ஒரு முறை தோற்கிறது. அசிங்கத்திடம் அழகு  உள்ளவரை தோற்கிறது. முடியில் சுருக்கம் அழகு! முகத்தில் சுருக்கம் அசிங்கமா? அழகு - நுரைக்கிறது.  அசிங்கம் - நிலைக்கிறது! அழகைப் பழிக்கவில்லை. அசிங்கத்தைப் பாடுகிறேன்... அசிங்கங்களின் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள். . . .