Sunday, October 23, 2011

கடவுள் ஏன் இல்லை? - ஒரு அறிவியல் நோக்கு!னிதனின் மிக மோசமான கண்டு பிடிப்பு எது என்று யாராவது கேட்டால், பதில் என்னவாக இருக்கும்? 
துப்பாக்கியா?, 
ஏவுகணையா? அல்லது 
அணு குண்டா? 
என்னைக் கேட்டால் இவை எதுவுமல்ல என்பேன். 
பதில் கடவுள்! 
காரணம் இருக்கின்றது!!இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்துடனோ அல்லது (நமது ?) சூரியன் போன்ற இதர நட்சத்திரங்களுடனோ அல்லது நமது சூரியக் குடும்பத்திலுள்ள ஏனைய கோள்கள் மற்றும் நம் பூமி, இப் பூமியிலுள்ள ஏனைய உயிரினங்களுடனேயோ ஒப்பிடும் போது மனிதன் அதாவது நாகரீகத்தின் பெயரில் மனிதனாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூக விலங்கின் தோற்றமானது புறக்கணிக்கத்தக்க அளவுள்ள வெறும் 200,000 ஆண்டுகள் தாம்.  நம் பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள்!!,(நன்றி http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution ). பிரபஞ்சத்தின் வயதோ 17.3 பில்லியன் ஆண்டுகள். அத்தனை பில்லியன் ஆண்டுகள் இல்லாத கடவுளை வெறும் 200,000 ஆண்டுகளில் வந்த நாம் தான் படைத்தோம்!   


கடவுளின் தோற்றம் 


கடவுள் எனும் தோற்றப்பாடு தோன்றுவதற்கு முக்கிய கரணங்கள் எதுவாக இருந்திருக்கலாம்? 
மனிதனின் பயம் மற்றும் அறியாமை!
சற்று சிந்தித்துப்பாருங்கள்...(*#@%?) 
முதன் முதலாக கிரகணங்களை (சூரிய மற்றும் சந்திர)
{ சூரிய கிரகணம் :- சூரியனுக்கும் , பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரியனை மறைத்தல்.}{சந்திர கிரகணம் :- சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமிவந்து, அதன் நிழல் சந்திரன் மீது விழுதல்}  பார்த்த மனிதக் கூட்டத்தின் மன நிலை எப்படி இருந்திருக்கும். கிரகணம் என்றால் என்ன வென்றே தெரியாத நிலையில் எவ்வளவு பயந்திருப்பார்கள். சற்று முன்னர் வரை இருந்த சூரியன் சில நொடிகளில் இல்லாமல் போனால் பயம் கொள்வது இயல்புதான். இது போன்ற இன்னும் பல வானியல் நிகழ்வுகள் (உதாரணமாக வால்வெள்ளி தோன்றுவது, எரி கல் பூமியின் மீது விழுவது, சூப்பர் மூன்) மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றை முதன்முதலாக அனுபவ ரீதியாக அறிந்த சாதாரண மனித கூட்டத்தின் மனநிலை மற்றும் எதுவும் செய்ய முடியாத நிலையை விபரிப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட சுனாமியைச் சொல்லலாம். 


அறிவியல் ரீதியில் முன்னேறிய மனிதனாலேயே அச் சுனாமி ஏற்படுத்திய இயலாமையை ஏற்றுக்கொள்ள முடியாத போது, நாக ரீகத் தின் ஆரம்பத்தில் இருந்த மனிதன் என்ன செய்திருப்பான்?அவர்களுக்கென்றான தலைவனிடம் முறையிட்டிருப்பார்கள். தலைவன் என்ன செய்வான், பாவம் அவன் என்ன விஞ்ஞானியா இவற்றை எல்லாம் அறிவியல் ரீதியாக விளக்குவதற்கு??இங்கே தான் கடவுள் என்னும் தோற்றப்பாடின் ஆரம்ப விதை விழுந்திருக்க வேண்டும். பண்டைய மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்ததும் இப்படித்தான்.


அதாவது, தம்மை பாதிக்கும் இயற்கையை வழிபடுவதன் மூலம் அதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்றும், தலைவனான தானே அவ் இயற்கைக் கடவுள்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவன் என்றும், அவனுக்கு வேண்டிய பொருட்கள் மற்றும் இளம் பெண்களை அவனுக்கு காணிக்கையாக கொடுத்தால் அக் கடவுள்களிடம் சொல்லி தம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுப்பதைத் தடுப்பேன் என்னும் சுயநலம் சார்ந்த, புத்திசாலித் தனமான எண்ணக்கரு யாரோ ஒரு தலைவனால் தன்னிடம் கட்டுப்பட்ட மனித கூட்டத்திடையே உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். (தம்முள் சக்தி வாய்ந்தவனை தலைவன் ஆக்குதல், அத் தலைவன் சொல்வதைக் கேட்டல் மற்றும் ஒற்றர்களை நியமித்தல், அத் தலைவனுக்கு இளம் பெண்களை கொடுத்தல் போன்ற செயற்பாடுகள் நம் மூதாதையரான குரங்கிலிருந்து நம்மிடம் வந்தவை என்பதை சொல்லி வைக்கின்றேன்)

{உதாரணம் :-
பொதுமகன் : தலைவா! கடவுளிடம் சொல்லி நாளைக்கு வேட்டையில், எனக்கு அதிக மாமிசம் கிடைக்கச் செய். கைவசம் உணவு இல்லை.
தலைவன் : அப்படியா! உன் மகள் லுலுவை இன்று இரவு என்னிடம் அனுப்பிவை. அவள் மூலமாக கடவுளிடம் தொடர்பு கொண்டு நீ கேட்பதை செய்யச் சொல்கின்றேன். 
பொதுமகன் : அப்படியே செய்கின்றேன் தலைவா. தலைவன் வாழ்க!! }


அதுவே முதலில் அருகாமை மனிதக் கூட்டத் தலைவனிடம் ஒற்றன் மூலமாகவோ அல்லது பிடிபட்ட அடிமை மூலமாகவோ தெரியவந்து, இப்படியே ஏனைய தலைவர்களிடமும் பரவி, அவர்களும் தம் கற்பனைக்கு ஏற்றாற் போல் கடவுள்களை விதம் விதமான உருவங்களில் உருவாக்கி, 

தம் மக்களிடம் அதனை கொண்டு சென்று, எல்லா வற்றுக்கும் காரணம் இக்கடவுள்களே என்று அவர்களையும் நம்பவைத்து, அவர்களும் அதனை நம்பி, வழிபட ஆரம்பித்து, அக் கடவுளுக்கு காணிக்கைகள் மற்றும் உயிர் பலி கொடுக்க ஆரம்பித்து...........எல்லாம் வல்ல கடவுள்களும் மற்றும் அம்மக்களின் நம்பிக்கையைப் பொறுத்து மதங்களும் இப்படித்தான் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்! 


அறிவியலாளர்களின் வரவு

கடவுள்களின் பெயராலும், மூட நம்பிக்கைகளாலும், அறியாமையாலும் மதங்கள் இவ்வுலகை இப்படித்தான் ஆளத் தொடங்கின.  மதங்களின் ஆட்சி உச்சம் பெற்றிருந்த காலங்களில் இப்பூமி தட்டையானது எனவும்,
தம் மதங்களிற்கு ஏற்றாற்போல் அட்லஸ், நாகப் பாம்பு, ஆமை,யானைகள், பன்றி போன்றனவே இப் பூமியைத் தாங்கி நிற் பதாகவும், சூரியனே இப்பூமியைச் சுற்றுவதாகவும்,  

இன்னும் பல விதமாகவும் காலங் காலமாக நம்பி வந்தார்கள் அல்லது மதத் தலைவர்களால் நம்ப வைக்கப் பட்டார்கள். மாற்றுக் கருத்தை வெளியிட்டவர்கள் கொல்லப் பட்டார்கள். (எப்படிக் கொல்லப் பட்டார்கள் என்பதைக் கூற தனிப்புத்தகமே எழுதலாம். அவ்வளவு கொடூரமானது)பின்னர் வந்த கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டிலினால்


பூமி தட்டை அல்ல உருண்டை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்னரே அதை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார்கள். அதாவது பூமி தட்டையாக இருந்தால், கடலில் வரும் கப்பல் தெரியும் போது கப்பலின் முன்பகுதி மற்றும் பாய் மரம் என்பன முழுமையாகத் தெரியும். ஆனால் பூமி உருண்டை என்பதால், கப்பலின் முகம் தெரிந்த பின் தான் அதன் பாய் மரம் தெரியும். அதே போல சந்திர கிரகணத்தின் போது பூமி கோள வடிவம் என்பதால் தான் சந்திரனின் மீது விழும் பூமியின் நிழலானது வட்டமாகத் தெரிகின்றது. பூமி தட்டையாக இருந்திருந்தால், சந்திரனின் மீது நிழலானது ஒரு கோடாக மட்டுமே விழுந்திருக்கும்.

அதற்குள் இந்தக் கண்டுபிடிப்பை மக்கள் நம்பும் படி செய்வதற்குள் அவர் சந்தித்த அவ மரியாதைகள், ஏளனங்கள், தண்டனைகள் ஏராளம் ஏராளம் . இப்படியே பின்னர் வந்த அறிஞர்களான தொலமி, கொப்பர்ணிகஸ், கெப்ளர், கலிலியோ கலிலி போன்றவர்களின் (இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல நூறு விஞ்ஞானிகளும் இதற்குள் அடக்கம். முக்கியமானவராக அல்பேர்ட் ஐன்ஸ் ரீனைக் குறிப்பிட்டாக வேண்டும்) அர்பணிப்புடன் கூடிய கண்டு பிடிப்புக்களால் காலங்காலமாக இருந்து வந்த மூட நம்பிக்கைள் பல படிப்படியாக தகர்த் தெறியப்பட்டன என்பது வரலாறு.


கடவுளின் இன்றைய நிலை 


கடவுள் மறுப்பாளர்களிடம் கேட்டுப் பாருங்கள், மறுப்பதற்கு பெரியார் தொடங்கி பெருவெடிப்பு (big bang) வரையிலான ஆயிரம் காரணங்கள் கூறுவார்கள். இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் கொடுத்தாயிற்று. இயற்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் விஞ்ஞான ரீதியாக தகுந்த விளக்கம் கொடுக்கும் போதும் கடவுள் பற்றிய நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப் படுகின்றது. கடவுள் நம்பிக்கையாளர்கள், கடவுளைக் காலங்காலமாக தொழுபவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்களிடம் சரியான ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமே இருக்காது. கடவுள் நம்பிக்கைக்குக் காரணமாக பின்வருவ வற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கும்.

1. அறியாமை :  என்ன தான் அறிவியல் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் அறியாமல், முன்பு வாழ்ந்த, கற்பனையில் சிறந்த படைப்பாளிகளின், அளவுக்கதிகமான, அதீதமான கடவுள்கள் பற்றிய படைப்புக்களை முழுதாக நம்பி, கடவுள் புராணங்களையே பாடிக் கொண்டிருப்பது.
கடவுள் மற்றும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றின் தோற்றப் பாட்டிற்கு முக்கிய காரணமாக இதனைக் குறிப் பிடலாம். அதாவது, படைப்பாளிகள் என்ன செய்தனர் என்றால், தாம் வாழும் சமூகத்தில் நல்லொழுக்கம் மேம்பட வேண்டும் என்பதற்காக, தமது படைப்புக்களில், குற்றம் புரிபவர்கள் இறந்த பின் கடவுளால் நரகத்திற்கு அனுப்பப்பட்டு காலத்திற்கும் துன்பம் அனுபவிப்பர் என்றும், நல்லது செய்வோர் இறந்த பின் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டு என்றென்றைக்கும் கடவுளுக்கு அருகில் இன்பம் திளைக்க வாழலாம் என்றும் நம்பும்படியான ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. அது அக் குறித்த சமூகத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, காலம் காலமாக அத் தோற்றப் பாடு நம்பப்பட்டு வந்தது; வருகின்றது.
 ( அறியாமைக்கு உதாரணமாக : அமேசான் காடுகளில் இன்றும் உள்ள பழங்குடியினரிடம் நீங்கள் உலகம் என்பது இந்தக் காடு மட்டுமல்ல என்று அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் என்ன அதற்குள் அவர்கள் உங்களைப் பச்சையாக சாப்பிடாமல் இருந்தால் சரி) 

2. இயலாமை : தம் சக்திக்கு அப்பாற்பட்டு வரும் துன்பங்கள் எல்லா வற்றுக்கும் தீர்வு தரக் கூடிய ஒன்றாக கடவுளையே காலங்காலமாக எம் மூதாதையர் நம்பி வந்தது, அந்த நம்பிக்கையையே வேறு வழியின்றி இன்றும் தொடர்வது. 

3. கடவுள் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு {சாமியார்கள்(சாமியார் என்றாலே போலி தானே? அதில் என்ன போலிச் சாமியார் என்று தனியாக??), மதத் தலைவர்கள் உட்பட}, எதிர்த்துக் கேள்வி கேட்காத, சொன்னதைச் செய்யும் முட்டாள் மக்கள் தேவை. எனவே அவர்களை மூளைச் சலவை செய்து எப்போதும் தம் சொல் கேட்கும் படி வைத்திருக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்த கடவுள் சித்தாந்தம் மிகச் சிறந்த வழி. 

4. மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு சமூக அமைப்பு இன்றியமையாதது. கடவுள் எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்தால் எங்கே தான் குறித்த சமூகத்திலிருந்து விலத்தி வைக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம். அதனாலேயே கடவுளை ஆதரிப்பது போல் நடித்தல். ( கடவுள் ஒன்றும் வீட்டுக் கதவைத் தட்டி, ஏய் போலி! என்று களுத்தை நெரிக்க மாட்டார் என்று நிச்சயமாகத் தெரியும்)

5. காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக, கடவுளைத் தொழுதலை செய்து வருவதாலோ என்னவோ (ஜீன்கள் மூலம் கடத்தப்படும் பழக்கம்?) ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே பழகிப் போன ஒரு பழக்கத்திற்காக செய்வது.  

இவற்றைப்போல் இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. கேட்டால் சொல்வார்கள் , இந்த பிரபஞ்சத்தையும், அதில் இந்தப் பூமியையும் , அதில் இத்தனை கோடி உயிரினங்களையும் கடவுள் தான் படைதார். அவர்தான் எங்கும் வியாபித்து இருக்கின்றார். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். அவரைப் பழிப்பவர்களை அழித்து விடுவார் என்று.......  
பாவம்! இவர்கள் அறியாமையை என்ன வென்பது!!


பெரு வெடிப்பு (Big Bang) கொள்கை  எல்லா மதங்களாலும் தங்கள் தங்கள் கடவுளரே இப்பிரபஞ்சத்தைப் படைத்ததாக காலங்காலமாக நம்பப்பட்டு வந்தது.ஆனால் பெருவெடிப்பின் மூலமே இந்தப் பிரபஞ்சம் தோன்றியது கடவுள் மூலம் அல்ல என்று அறிவியலாளார்கள் மூலம் உதாரணத்துடன் நிரூபிக்கப்பட்டது. 

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஆரம்பத்தில் அணுவிலும் சிறிய ஒரு புள்ளியாக, வெப்பத்திலும், அடர்த்தியிலும் மிக மிக, அதிகமாக, கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவில் இருந்து, ஏற்பட்ட பெரு வெடிப்பின் மூலமாகவே இப்பிரபஞ்சமும் அதைச் சார்ந்த பொருட்களும் (Matter) காலமும்(Time) தோன்றியது. அத்துடன் வேகமாக விரிவடையவும் செய்தது.மிக வேகமாக விரிவடைந்ததன் காரணமாக இப்பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது. ( அண்மைக் காலம் வரை இவ்விரிவடைதலின் வேகமானது குறைந்து கொண்டு வருவதாகவே கருதப் பட்டு வந்தது. ஆனால் அப்படியில்லை, இப்பிரபஞ்சம் முன்பை விட இன்னும் அதிகமாக விரிவடைந்து கொண்டு செல்கின்றது என அறிவியலாளர்கள் மூவர் கண்டறிந்து சொன்னதற்காக, 2011ல் இயற்பியலுக்கான நோபால் பரிசைப் பெறுவதாக அவர்கள் அறிவிக்கப்பட்டார்கள். கீழுள்ள படம் பார்க்க -  )
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியலாளராகப் போற்றப்படும் prof. Stephen Hawking சொல்வது யாதெனில், கடவுள் ஒன்றும் ஒரே நாளிலேயே இப்பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை. விஞ்ஞான ரீதியாகக் கூறுவதானால்,
புதிதாக பிரபஞ்சம் உருவாக என்ன வெல்லாம் தேவை? 1.சக்தி(Energy), 2.பொருள்(Matter)  மற்றும் 3.வெளி (Space) ஆம், இந்த மூன்றும் தான் தேவையானவை.அப்படியானால் இந்த மூன்றும் எங்கிருந்து பெற்றுக் கொள்ளப் பட்டன?.
விடை - இம்மூன்றும் பெருவெடிப்பின் மூலம் (Big Bang)பெற்றுக்கொள்ளப்பட்டன. ஆம்.  BIG BANG!!. பெருவெடிப்பின் பின்னர் தான் இடமும் காலமும் தோன்றியது. (Space and Time) பெருவெடிப்பின் முன் காலம் என்பதே இருக்கவில்லை. எனவே இல்லாத ஒருகாலத்தில் கடவுள் எப்படி இருக்க முடியும். கடவுள் என்பவருக்கு அங்கே இடமில்லை.
 நாம் வாழும் பூமியின் விளிம்பைத் தொடப்போவதாக யாராவது கிளம்பினால் அவர்களை என்னவென்பது.வெறும் பைத்தியக்காரர்கள். ஏனென்றால் நாம் வாழும் பூமி கோள வடிவமானது. கோளத்திற்கு விளிம்பில்லை என்பதுதானே வெளிப்படை உண்மை??. பெரு வெடிப்பு ஏற்பட்டதிலிருந்து இன்றைய திகதியில் உலகம் உள்ளது வரைக்கும் எந்தக் கணத்திலும் கடவுளுக்கான தேவை இருக்கவில்லை. எனவே கடவுள் இல்லை! God Doesn't Exist!!


மேலே சொன்னது போல் பூமியின் விளிம்பைத் தொடப்போகிறேன் என்பவர்களுக்கும், கடவுள் இருக்கின்றார் என்பவர்களுக்கும் பெரிதாக வித்தியாசமில்லை என்றே படுகின்றது!
வெறும் பைத்தியக்காரர்கள்!!

(முற்றும்)


5 comments:

Anonymous said...

nice

கோவை மு சரளா said...

பெரும் உண்மை அதை சான்றுடன் சொன்னது அற்புதம் நேரம் இருப்பின் என் தளம் வருகை தரவும் http://kovaimusaraladevi.blogspot.in

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கம்... பாராட்டுக்கள்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

கோவை மு சரளா said...

உங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_29.html
என் தளம்
http://kovaimusaraladevi.blogspot.in/

Post a Comment