Skip to main content

Posts

Showing posts from March, 2011

நகர வாழ்க்கை

நகர வாழ்க்கையின் பாதியை நிரம்பி வழியும் பேரூந்துகளும் , அது சுமக்கும் வியர்வை நாற்றங்களும் , எதிர்ப்பு ஊர்வலங்களும், சாலை நெரிசல்களுமாய் சர்வாதிகாரமாக விளுங்கிக் கொண்டிருக்கின்றன... கடற்கரை காற்றுக்கும் வர்த்தகச் சாயம் பூசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சுத்தமானதாகச் சுவாசிக்க   கியூவில் நின்று டிக்கட் எடுக்க வேண்டி வரலாம்... விளம்பரப் பலகைகளில் தான்   எத்தனை இளம் பெண்கள்... உதடுகளில் உயிர் இல்லாமல் , உள்ளாடையும் அணியாமல்! விரைவு உணவுகள் நாக்கை ஏமாற்றி , விரைவாகவே சிறு குடலில் விஷமாகின்றன. இருந்தும் விரும்பி  உண்ணப்படுகின்றன! போட்டி போட்டுக் கொண்டு வளரும் கட்டடங்கள் பொருளாதாரத்தைக் கூட்டுகின்றனவாம்... கட்டடங்களில் நிற்கும் தொடர்பாடல் கோபுரங்களின் அலைக் கற்றைகள்   மனித ஆயுளைக் குறைக்கின்றதே! குறுஞ்செய்திகளில் உறுதி செய்யப்படும் காதல் , ஹோட்டல் அறையில் கற்பை - சோதித்துப் பார்க்கச் சம்மதிக்கின்றது..... மென்மையை விற்கும்   உதட்டுச்சாயம் பூசிய  விபச்சாரப் பெண்களை பிரத்தியேக சாலைகளி