Skip to main content

Posts

Showing posts from October, 2011

கடவுள் ஏன் இல்லை? - ஒரு அறிவியல் நோக்கு!

ம னிதனின் மிக மோசமான கண்டு பிடிப்பு எது என்று யாராவது கேட்டால், பதில் என்னவாக இருக்கும்?  துப்பாக்கியா?,  ஏவுகணையா? அல்லது  அணு குண்டா?  என்னைக் கேட்டால் இவை எதுவுமல்ல என்பேன்.  பதில் கடவுள்!  காரணம் இருக்கின்றது!! இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்துடனோ அல்லது (நமது ?) சூரியன் போன்ற இதர நட்சத்திரங்களுடனோ அல்லது நமது சூரியக் குடும்பத்திலுள்ள ஏனைய கோள்கள் மற்றும் நம் பூமி, இப் பூமியிலுள்ள ஏனைய உயிரினங்களுடனேயோ ஒப்பிடும் போது மனிதன் அதாவது நாகரீகத்தின் பெயரில் மனிதனாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூக விலங்கின் தோற்றமானது புறக்கணிக்கத்தக்க அளவுள்ள வெறும் 200,000 ஆண்டுகள் தாம்.  நம் பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள்!!,(நன்றி  http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution  ). பிரபஞ்சத்தின் வயதோ 17.3 பில்லியன் ஆண்டுகள். அத்தனை பில்லியன் ஆண்டுகள் இல்லாத கடவுளை வெறும் 200,000 ஆண்டுகளில் வந்த நாம் தான் படைத்தோம்!    கடவுளின் தோற்றம்  கடவுள் எனும் தோற்றப்பாடு தோன்றுவதற்கு முக்கிய கரணங்கள் எதுவாக இருந்திருக்கலாம்?  மனிதனின் பயம் மற்றும் அறியாமை! சற்று