Skip to main content

Posts

Showing posts from 2019

தமில் விறுது - சிறு கதை

இன்று ஆகஸ்ட் 10, 2030.  வறுடம் தோறும் நடைபெறும் அகில உலக தமில் மொலி தினப் போட்டிக்கான விலாமேடை சிறப்பாக கண்கவர் நியோன் விலக்குகலால் அலங்கறிக்கப்பட்டு, கண்ணுக்கு மையிட்ட அலகான பெண் தொகுப்பாலினி, சிறப்பாக தொகுத்து வலங்கிக் கொண்டிறுந்தால்.  அடுத்ததாக நான் ஆவலுடன் எதிர் பாத்திறுந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளறை அறிவிக்கும் நேறம் வந்தது. காரணம் இவ்வாண்டுக்கான சிறந்த எலுத்தாலர்கலாக தமில் நேசன், ஆகாயத்தாமறை, இலமாறன் மற்றும் நான் தெறிவாகியிறுந்தோம்.  தொகுப்பாலினி தன் இனிய குறலில் "  நாம் வறுடா வறுடம் தமிலை எலுத்துப் பிலையில்லாமல் எலுதக்கூடியவர்கலுக்கு வலங்கிவறும் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர் விறுதை,  இம்முறையும் தமில் நேசனுக்கு வலங்குவதில் நாம் பெறு மகில்ச்சி அடைகின்றோம்". என் விறுது கனவு இம்முறையும் கலைந்து, நெஞ்சுக்குல் சுறுக் என்று பிசுங்கான் குத்தியது!  * * * * * #சிறுகதை #தமில்விறுது

முடிவல்ல,மீண்டும் ஆரம்பம்!

அனைவருக்கும் எனதன்பார்ந்த வணக்கம்! இறுதியாக இவ் blog இல் எழுதியது 2012 ல், இப்போது 2019. சரியாக 7 வருட இடைவெளி.  இந்த 7 வருடங்களும் வாழ்க்கையின் மிகச்சிறந்த படிப்பினை தந்த 7 வருடங்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேற்றம் தான்.  இந்த 7 வருடங்களில் உலகமே நிறையவே முன்னேறி விட்டிருக்கின்றது,  குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பில். கைத்தொலைபேசி பாரிய வளர்ச்சி கண்டுவிட்டது. 2012 ல் ஒரு Pc செய்த மாயாஜாலங்களை விடவும் அதிகமாக 2019 ல் சிறு கைத்தொலைபேசி செய்கின்றது.  சமூக வலைத்தளங்கள் வேறு கட்டத்தை அடைந்துவிட்டன. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூட கூடிய சக்தியாக அவை மாறி விட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான இலவச செயலிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இது செயலிகள் சூழ் உலகு. செயலிகள் இன்றி எதுவும் அசையாது. பிட்காயின் (Bitcoin) 2012 ல் ஒன்று 13 US$ விற்றது, 2017 ல் ஒன்று 20000 US$ ற்கு சென்றது. இன்றைய தேதியில்  ஒரு Bitcoin 10000 US$ ற்கு விற்பனையாகின்றது.  போதையில், சுய சிந்தனை இன்றி, தள்ளாடியபடி 2012 ல் Bitcoin வாங்கியவர்கள், 2019 ல் பில்லியனர்க