Skip to main content

Posts

Showing posts from May, 2010

காதலின் பாலர்வகுப்பு

21/02/2007 நம் கண்கள்  சந்தித்த போது  எனக்குள்ளே  ஏதோ இரசாயன மாற்றம்... உன் சிரிப்பென்ன  சிலந்தி வலையா? என் இதயத் தேனீ  மாட்டிக் கொண்டதே? என்னை  முட்டாளாக்கிய கவிஞன்  காதல். கவிஞனாக்கிய முட்டாள்  நீ. கொம்பாஸ் பெட்டி முழுக்க  என் பறக்கும் முத்தங்களை  ஏன்  பத்திரப் படுத்தி  வைத்திருக்கிறாய்? பார்ப்போரைக்  கொள்ளை கொள்கிறாய். என்னை மட்டும்  கொன்று தின்கிறாயே? வகுப்பறை வெண் சுவர்களில்  உன்னையும் என்னையும்  இணைக்கும்  எவ்வளவு கிசுகிசுக்கள்? யாருக்கும் தெரியவில்லை.  கண்களால் பார்த்துக்கொண்டு காதலின்  பாலர் வகுப்பில் தான்  நாம் இருக்கின்றோம் என்று... . . . 

கடதாசிப்பூக்களின் கூந்தல்

30/04/2007 என் வானத்தை மீண்டுமொரு முறை  எட்டிப் பார்த்தது  ஏமாற்ற வெண்ணிலவு... என்னுடைய வானம் எப்போதாவதுதான் நீலம். சூரியன் தான்  இப்போதும்  சுட்டு விட்டுப் போனது. பூக்களைத் தெரிவது  ஒருபோதும் கூந்தலல்ல!  கடதாசிப் பூக்களாலும்  அதன் மானம்  களவாடப் படுகின்றது... தென்றல் தேவை என்று ஒரு தோப்பிடம் சரணடைந்தேன்.  சூறாவளி தந்த விட்டு  என்னைச்  சுகம் விசாரித்துப் பார்க்கின்றதே? பாலையும் நீரையும்  பிரிக்கத் தெரியாத  அன்னப் பட்சி தான் நான். எனக்குப்  பாலும் சம்மதம் நீரும் சம்மதம். பாடும் பறவையாய் வாழ  யாருக்குத் தான்  ஆசை இல்லை. சிறகுகள் தான்  சிலருக்கு  முளைக்க மாட்டேன் என்கிறது! . . .

வரமாய் வந்த தேவதை!

05/04/2009 உருவம் அருவமற்ற  உன்னத உணர்வென கடவுளைச் சொல்கிறார்கள்...  நாத்திகன் எனக்கு  உன் நட்புத்தான் அப்படி. நான்  நோயில்  வாடும் போதும், தோல்வியால்  துவளும் போதும்,  கண்ணீரால் நனைவது  உனது கண்கள் தானே? ஊடல் கொள்பவன்  நான் தான். சற்றைக்கெல்லாம், மன்றாடி  மன்னிப்புக் கேட்பது  நீயல்லவா? நான் இருட்டுக்குள்  தொலைப்பவன். நீ வெளிச்சத்தில்  என்னைத் தருபவள்... என்ன வரம்  வேண்டும் என்றால் என் நிழலாய் இருப்பதே  போதும்  என்கிறாய்!   என்னை தொடர்வதில்  உனக்கு  அத்தனை பெருமையா?  தொப்புள் கொடியால்  நாம் இணையவில்லை. ஆனாலும் நீயெனக்கு  இன்னுமொரு தாய் தான்... என்னிலிருக்கும்  நம்மை நம்புகின்றேன். நீ தலையசைத்தால் உன் உள்ளங்கையில்  என்னுயிரையும்  கிள்ளி வைப்பேன்... . . .

நிர்ப்பந்தப் பொழுதுகளின் காரணி!

11/08/2006 கண்கள் கலங்கிடும்  என் நிர்ப்பந்தப்  பொழுதுகளுக் கெல்லாம்  நீ தானே முழுக் காரணம்? காதல் வலியல்ல...... கொடுமை. கற்றுத் தரத்தான்  நீ வந்தாயா  என் இதயக் கூண்டுக்குள்  பொன்வண்டாய்? உனக்காக  கவிதை எழுத மட்டுந்தானா  என் இளமை இங்கே  எடுத்துக்கொள்ளப்பட்டது? நிலவு தொலைந்து, வசந்தம் வறண்டு, ரோஜாக்கள்  அழிந்தே போகட்டும்! நாட்குறிப்பேட்டின்  நாடாவைப் போல, உன்னுடைய ஞாபகங்களை  வலிகளாய் என்னுள் செருகியது  வாழ்க்கை. . . .

ஆகவே மின்பாவனையாளர்களே !

நா ன்  இங்கு    பேசப்  போவது,  மன்னார் மாவட்டத்திற்கான  மின்பாவனையையும் மின்பட்டியலையும் பற்றி.  பொதுவாக இது இலங்கை முழுவதற்கும் பொருத்தமான தொன்றாகவே அமைகிறது.  மேல் வர்க்கத்தினர் ஒருபுறம் இருக்கட்டும் அவர்களுக்கு மின்படியலைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை.  அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.  ஏழைகளுக்கும் கூடப் பிரச்சினை இல்லை. அவர்களின் மின்பாவனையானது ஒரு போதும் கவலை கொள்ளக் கூடியவாறு இருக்கப் போவது இல்லை.  ஏனெனில்,  சி று கோடுக்கு அருகில் பெரிய கோடொன்றினைப் போடும் போது சிறிய கோடானது  ஒருபோதும்  பெரிதாகத்  தெரிய வாய்ப்பில்லைத் தானே?  . இங்கு பெரிய கோடானது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பிரச்சனையைக் குறிக்கின்றது. நாம் அலசப் போவது இவை இரண்டுக்கும் இடையில், மேல்வர்கமும் அல்லாமல், கீழ் வர்க்கமாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விருப்பமும் இல்லாமல்,  மத்திய வர்கத்தில், மாத சம்பளத்தில், பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் மக்களைப் பற்றி.  குறிப்பாக இவர்கள் அனைவரின் வீடுகளிலும் மின்பாவனைப் பொருட்கள் நிச்சயம் காணப்படும். வரையறையற்ற விதமாக மின்  சாதனங்களைப்  பாவிப்பதும், ப

மன்னாரில் ஒரு ஆச்சரியம்!

                                                                                    இ லங்கை மின்சார சபையின் பிராந்தியத்திற்கான பண்டகசாலை(depot) இலே ( மக்கள் இதனை மின்சார சபையின் காரியாலயம் என்றே விளிக்கிறார்கள்.ஆனால் இது பண்டகசாலை என்பதே உண்மை. மின் இணைப்புகளின் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால் மட்டுமே அப்பிரதேசத்தில் காரியாலயம் ஓன்று உருவாக முடியும்) இன்று (03/05/2010) புதிய மின் இணைப்பைப் பெறுவதற்கான பத்திரங்களைச் (form)சமர்ப்பிற்பதர்காக என்றும் இல்லாதவாறு (வரலாற்றிலேயே முதன்முறையாக என்பதைக் குறித்துக் கொள்ளவும்) மக்கள் கூட்டம் அலைமோதியது. எப்போதுமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் இங்கு இவ்வாறானதொரு நெருக்கடி நிலை காணப் படுவதானது ஆச்சரியமானதொரு அசாதாரண நிகழ்வாகும்.  இச்சம்பவத்தினால் உண்டான ஆச்சரிய மேலீட்டால் (இன்னும் கூட மூக்கின் மேல் விரலை வைத்திருக்கும்), மன்னார் பிராந்தியத்தின் மின்மானி வாசிப்பாளராகப் பணியாற்றும் கஜேந்திரன் என்பவர் தெரிவிக்கையில், "இவ்வாறு பெருமளவான மக்கள் கியூவில் நின்று, புதிய மின் இணைப்பைப் பெறுவதற்காக காத்திருந்தமையை இன்று தான் முதன் முதலாகக் காண்கிறேன்&

தமிழில் இலகுவாக டைப் பண்ணுவதற்கு

ஆதலினால் இணைய சோம்பேறிகளே! தமிழில் டைப் செய்வது கடினமாக இருக்கின்றதே என்று இனி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இதோ ஒரு இலகுவான வழி. வேடிக்கையாகவும் இருக்கும். தமிழ் தவிரவும் இன்னும் இருபதுக்கு மேற்பட்ட மொழிகளிலும் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு முறை முயன்று பாருங்கள்...    http://www.google.com/transliterate/indic/Tamil

கவிதை எழுதுங்கள்

எ ன்னை பொறுத்த வரைக்கும் கவிதை என்பது அனுபவத்தில் , உணர்ச்சி வெளிப்பாட்டில் வந்ததாக இருக்க வேண்டும். கண், காது.... போல கவிதையும் ஒரு அங்கம்தான். ஆ! என்பதில் கூட்டத்தான் ஒரு அற்புத கவிதை ஒழிந்திருக்கிறதே! எப்படி என்றால், ஒரு வலியின் அத்தனை உணர்ச்சிகளையும் அந்த்த ஆ! அடக்கி வைத்திருக்கிறதே! யாரோ ஒருவர் சொன்னது போல ஒவ்வொரு கவிதையும் எனக்கு ஒவ்வொரு பிரசவம்! முதல் குழந்தையை பிரசவிக்கும் தாய் போல அத்தனை சுகத்தை அனுபவிக்கிறேன்!எல்லாக் குழந்தையும் அழகாகவோ , நிறைவாகவோ பிறப்பதில்லையே! கவிதைகளும் அப்படித்தான். அழகான குழந்தை ஒருவேளை பெருமையை சேர்க்கலாம், சந்தோசத்தை தரலாம். ஆனால் ஊனமான குழந்தையோ வாழ்க்கையின் அத்தனை படிப்பினை களையும் புரிய வைக்கிறது.

ஹைக்கூ

வாடவில்லை மேசையில் கடதாசிப் பூக்கள் . . .

பணமும் காதலும் (2010)

பணக்காரர்களின்  காதல்  எப்படியிருக்கும்? கரன்சி நோட்டுத்தான்  இவர்களின் காதல் குறியீடா? இதயம் என்பதென்ன  இங்கே இலவம் பஞ்சா? பணம் தான் இவர்களின்  பல்லாக்கு என்றால்  மனம் என்பதென்ன  வெறும் மண்ணாங்கட்டியா? ஐயா! பணம் பார்த்து  வருவதன் பெயர் காதல் என்றால்  விபச்சாரத்தை யாரும்  விலக்கி வைக்க மாட்டார்களே? பணம் என்பதெல்லாம்  வெறும் பகட்டுக்குத் தான். குணம் ஒன்று தான்  என் குறிக்கோளே! தராதரம் பற்றிப் பேசவும்  ஒரு தகுதி வேண்டாமா? நான் வாழ்க்கையில்  ரொம்பவே பட்டவன்.  ஆயினும்  ஒழுக்கத்தை  ஒழுங்காகக் கற்றவன். உங்கள் பணம் உங்களைத்  தோலில் சுமக்கும். என் காதல் என்னை  இதயத்தில் ஏற்றும். எது பெரிது? நம்மிடம் என்ன இல்லை? என்னிடம் பணம் இல்லை. உம்மிடம் இதயம் இல்லை. நம்மிடம் என்ன இல்லை? முறை என்னும் சமன்பாட்டை  முயன்று தீர்த்தேன். முறை தான் இங்கே  முரண் கொள்கிறதாம்... x இற்கும்  y இற்கும் இங்கு  என்னய்யா சம்பந்தம். எல்லாம்  படைப்பின் சித்தம். பத்தாயிரம் ரூபாயில்  பட்டுப் புடவை, நகை நட்டும் தருவார்  உன் அம்மா. உனக்குப் பிடித்ததாய்  ஒரு வரி கேட்பாரா? உன் தேவையும்  என் தேவையும் ஒத்துப் போனதால் தா

என்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (The Reason...by Hoobastank)

I'm not a perfect person There's many things I wish I didn't do But I continue learning I never meant to do those things to you And so I have to say before I go That I just want you to know I've found out a reason for me To change who I used to be A reason to start over new and the reason is you I'm sorry that I hurt you It's something I must live with everyday And all the pain I put you through I wish that I could take it all away And be the one who catches all your tears Thats why i need you to hear I've found out a reason for me To change who I used to be A reason to start over new and the reason is You and the reason is You [x3] I'm not a perfect person I never meant to do those things to you And so I have to say before I go That I just want you to know I've found out a reason for me To change who I used to be A reason to start over new and the reason is you I've found a reason to show A side of me you didn't know A reason for al

என்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Don't Worry, Be Happy...by Bobby McFerrin)

Here is a little song I wrote You might want to sing it note for note Don't worry be happy In every life we have some trouble When you worry you make it double Don't worry, be happy...... Ain't got no place to lay your head Somebody came and took your bed Don't worry, be happy The land lord say your rent is late He may have to litigate Don't worry, be happy Lood at me I am happy Don't worry, be happy Here I give you my phone number When you worry call me I make you happy Don't worry, be happy Ain't got no cash, ain't got no style Ain't got not girl to make you smile But don't worry be happy Cause when you worry Your face will frown And that will bring everybody down So don't worry, be happy (now)..... There is this little song I wrote I hope you learn it note for note Like good little children Don't worry, be happy Listen to what I say In your life expect some trouble But when you worry You make it double Don't worry, be happy

என்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Fanaa - chaand sifarish....)

hmm hmm hmm hmmm la la la hey hey hey hey ah ha subhaan allaah subhaan allah subhaan allah subhaan allaah subhaan allah subhaan allah valle valle valle valle valle valle சான் சிபாரிஷ் ஜோ கர்த கமாரி தேட்ட வோ தும்கோ பதா ஷம் ஓ ஹயா பே பர்தே கிராகே கர்ணி ஹைன் ஹம்கோ ஹதா சித்து ஹேன் அபு தோ ஹேன் ஹுது கோ மிடானா ஹோன ஹேன் துஜ்மேன் fanaa சான் சிபாரிஷ் ஜோ கர்த கமாரி தேட்ட வோ தும்கோ பதா ஷம் ஓ ஹயா பே பர்தே கிராகே கர்ணி ஹைன் ஹம்கோ ஹதா valle valle valle valle தேரி அதா பி ஹே ஜோன்கே வாலி சுகே கி குசார் ஜானே தே தேரி லசக் கேன் கே ஜெயசே டாலி தில் மேய்ன் உதார் ஜானே தே ஆஜா பாகோன் மேய்ன் கார்கே பகானா ஹோனா ஹேன் துஜ்மேன் fanaa சான் சிபாரிஷ் ஜோ கர்த கமாரி தேட்ட வோ தும்கோ பதா ஷம் ஓ ஹயா பே பர்தே கிராகே கர்ணி ஹைன் ஹம்கோ ஹதா subhaan allaah subhaan allah subhaan allah subhaan allaah subhaan allah subhaan allah ஹேன் ஜோ இராதேன் பதா தூண் தும்கோ ஷர்மா ஹி ஜாஓகி தும் கடகனேன் ஜோ சுனா தூண் தும்கோ கப்ரா ஹி ஜாஓகி தும் கம்கோ ஆதா நஹி ஹேன் சபானா ஹோனா ஹேன் துஜ்மேன் fanaa