Skip to main content

Posts

Showing posts from June, 2011

மைக்ரோ கவிதைகள் - 02

நாமெல்லோரும் பாதுகாப்பதாக நினைத்து உள்ளங்கைக்குள் ஒரு அழகான பட்டாம் பூச்சியை எப்போதுமே அடைத்து வைத்திருக்கின்றோம். அந்தப்பட்டாம்பூச்சி - நம் வாழ்க்கை! அதை அழுத்திக் கொல்வதும் அன்றி சுதந்திரமாக பறக்க விடுவதும் அவரவர் இஷ்டம்! இறக்கை ஒடிந்த பலரின் பட்டாம்பூச்சிகள் பறக்க முயற்சிப்பதை பார்த்திருக்கின்றேன். ஆனால்..... அவை பறப்பதேயில்லை!! ***** நீண்ட வரண்ட கோடைக்குப் பிறகு  வாழ்க்கையை  நேசிக்க ஆரம்பிக்கையில் .......... அவ்வளவு அழகானதாகவும்,  அர்த்தமுள்ளதாகவும்  படுகின்றது வாழ்க்கை! காதலால் தொலைத்ததை நட்பினால் பெறல்.....  குற்றமல்ல! . . .

மைக்ரோ கவிதைகள்

வானத்தெருவில் கொட்டியிருக்கும் நட்சத்திர அரிசியை கொத்தித் தின்னும் இரவுக் குருவியை எங்கே  இன்னும் காணோமே ????? ***** மேகத்தின் பொக்கற்றுக்குள் இருந்து நழுவிக்கொண்டிருக்கின்றது நிலவு. எப்போது விழுமோ.... ஏந்தக் காத்துக்கொண்டிருக்கின்றேன். ***** மாம்பழம், பலாப்பழம், பப்பாப்பழம் கூட உணவு மேசையில் உள்ளது. ஆனாலும் புளிக்கும் திராட்சையே ஏனோ பிடித்திருக்கின்றது. ***** தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் உயிரினத்தின் அடிப்படைத் தேவைகள். அதுகூட கிடைக்காதவர்களுக்கு என்னுடைய சிபாரிசு ... காதல்! காதலியுங்கள். நல்ல பெண்களைக் காதலியுங்கள்! ***** . . .

தேநீர் வேளை

உனக்கும் எனக்குமிடையிலான தேநீர் வேளைகளை நான் அதிகம் நேசிக்கின்றேன்... காதற்ற தேநீர்க் குவளையை நீ நீட்டும் போது உன் கைவிரல்கள் தொடாமல்தான் வாங்கப் பார்க்கின்றேன். மீறியும் பட்டால் முறைக்காதே. என் தவறு ஏதுமில்லை. இரும்பைக் கவர்வது காந்தத்தின் இயல்புதானே.... நீ தரும் தேநீர் உள் நாக்கில் தித்திக்கும். உன் கூந்தல் வாசம் என் உயிரோடு கலக்கும். நம் இயல்பான பேச்சுக்களின் இடையே உன் கண்கள்  என் கண்களை வேறு உலகத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறி, நொருங்கி உன் தேநீர்க் குவளைக்குள் விழும் என்னை சட்டென எடுத்துக் குடிப்பாய். நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை உன் கடைவாயில் ஒட்டியிருக்கும் காதல்தான் சொல்ல வேண்டும்! . .

3 கவிதக

தொந்தி கரைய காலையில் ஓடுபவர்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகின்றது..... ஏழைகளுக்குப் பட்டினி இவர்களால் தானா? *** காமம் தழுவி, அவளை அவிழ்க்கத் துடிக்கும் என் கண்களைப் பார்த்தாள்  காதலி! உணர்ந்தேன். உடலைத் தின்பது காமம் உயிரைத் தின்பதே காதல் என்பதை  உணர்ந்தேன்! உடனேயே மன்னித்தாள் காதலி. மன்னிக்கவேயில்லை காதல்! *** பணம் தான்... காலுக்குக் கீழேயிருந்தால் நலம். இதயத்திற்கு அருகில் வந்தால் ஆபத்து! தலைக்கு மேலே போனால்...... ஆழ்ந்த அனுதாபங்கள்!! ***