ஒரு முதற்தர கவிஞனின் உன்னத படைப்பு நீ. சக்தி வாய்ந்த பீர் போத்தலொன்றின் சில்மிஷங்களை விட உன் கண்கள் செய்வது அதிகம் தான். குளோரோபோமை விடவும் உன் சிரிப்புச் சிறந்தது என்பது மருத்துவர்களுக்கான என் சிபாரிசு. மல்லிகையை விட உன் பாதங்களுக்கு மென்மை அதிகமென்பது என் நம்பிக்கை. வாதாடவா? டாவின்சியின் நவீனங்கள் உன் ஒற்றைப் பேனாக் கிறுக்கலுக்கு எந்த வகையில் ஈடாகும்? சத்துணவுத் திட்டத்தில் முட்டைக்குப் பதிலாக குழந்தைகளுக்கு தினம் நீ ஒரு முத்தம் வைக்கலாம். வேற்றுக் கிரக வாசிகள் பூமியின் அழகான பெண்ணைக் கடத்தத் திட்ட மிடுவதாக நாசாவில் பேச்சு. பத்திரமாய் இரு பெண்ணே! தெருவில் உன்னைப் பாடும் வாலிபக் கவிஞர்கள் மிக அதிகம். ஆனால் நீ - என்னை மட்டுமே காதலிக்கிறாய் என்பதால் எனக்கு எப்போதுமே கர்வம் தான்... . . .