இன்று ஆகஸ்ட் 10, 2030. வறுடம் தோறும் நடைபெறும் அகில உலக தமில் மொலி தினப் போட்டிக்கான விலாமேடை சிறப்பாக கண்கவர் நியோன் விலக்குகலால் அலங்கறிக்கப்பட்டு, கண்ணுக்கு மையிட்ட அலகான பெண் தொகுப்பாலினி, சிறப்பாக தொகுத்து வலங்கிக் கொண்டிறுந்தால். அடுத்ததாக நான் ஆவலுடன் எதிர் பாத்திறுந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளறை அறிவிக்கும் நேறம் வந்தது. காரணம் இவ்வாண்டுக்கான சிறந்த எலுத்தாலர்கலாக தமில் நேசன், ஆகாயத்தாமறை, இலமாறன் மற்றும் நான் தெறிவாகியிறுந்தோம். தொகுப்பாலினி தன் இனிய குறலில் " நாம் வறுடா வறுடம் தமிலை எலுத்துப் பிலையில்லாமல் எலுதக்கூடியவர்கலுக்கு வலங்கிவறும் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர் விறுதை, இம்முறையும் தமில் நேசனுக்கு வலங்குவதில் நாம் பெறு மகில்ச்சி அடைகின்றோம்". என் விறுது கனவு இம்முறையும் கலைந்து, நெஞ்சுக்குல் சுறுக் என்று பிசுங்கான் குத்தியது! * * * * * #சிறுகதை #தமில்விறுது
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....