Skip to main content

Posts

Showing posts with the label கவிதைகள்

கேடுகெட்டவர்களின் காதல்!

அவன் பார்த்தான். அவள் சிரித்தாள். அப்போது பிறந்ததை காதல் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்! கடற்கரையில் ஒன்றாக கால் நனைத்தார்கள். வகுப்பறையில் தனியாக முத்தமிட்டுக் கொண்டார்கள். பூங்காவில் மெய்மறந்து அணைத்துக் கொண்டார்கள். இரவுப் பேரூந்தின் இறுதி இருக்கையில் ஒருநாள் எல்லை மீறினான் அவன். ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி  வியந்தாள் அவள். ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி பித்துப்பிடித்தான் அவன். அவளோ தவித்தாள்! தடுக்கவும் மனமில்லாமல், அனுமதிக்கவும் முடியாமல் அவள் தவித்தாள், உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள். அவனோ வேண்டுமென்றே  மிச்சம் வைத்தான்! அப்போது  அவர்கள் இருக்கை முழுவதும்  நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்! மறுநாள், உபத்திரவமற்ற  ஹோட்டல் அறையில், காதலின் பெயரால்  அவள் ஆடை களைந்தாள்- உலகத்தின் சார்பாக ஒளித்துவைக்கப்பட்ட அவனது கைபேசியின் கமெராக் கண்கள் அதைப் பதிவுசெய்வதை அறியாமல்! உச்சமடைந்து, உடல்கள் களைத்து, கறைகள் களைந்து, ஆடை அணிந்து அறையை விட்டு வெளியேறினர். கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும் அவர்க...

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

வெட்கக்கேடு!

* ** *** ** * கால்கள் செயலற்றுப்போன  இளைஞன் ஒருவன் தன்நம்பிக்கையுடன், சாலையில்  பழங்கள்  விற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்... தகுந்த வேலைக்காக தலைக்கனத்துடன் காத்திருக்கும் சில வேலையற்ற பட்டதாரிகள் சார்பாக வெட்கித்தலை குனிந்தேன்! . . .

தாழ்வு மனப்பான்மை!

> >> > உளவியல் கணிப்புப்படி தாழ்வு மனப்பான்மையின்  தாய் - உடலமைப்பு! தந்தையோ - நிறக்குறைவு! தாழ்வு மனப்பான்மையை  விட்டொழி, வெற்றி பெறுவாய் என்று போதிப்பது  சுய முன்னேற்றப் புத்தகங்களின்  விற்பனைத் தந்திரம்! கல்லா கட்டியதும் தங்கள் கடையை மூடி விடுவார்கள்! பாதிக்கப்பட்டவனோ  பாதியிலே விடப்படுவான்! உண்மையில் உடல் அமைப்பும் நிறக் குறைவும் ஒருபோதும் நோயாகாது! தோற்றத்தைப் பார்த்து  எடைபோடுபவர்களை வேண்டுமானால் மன நோயாளிகளாக வைத்துக் கொள்ளலாம். அவர்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்லலாம். என்னைப் பொறுத்தவரை, தாழ்வு மனப்பான்மை என்பது கேடயம்! பந்தாக் காரர்களும், பணக்காரர்களும்  பவிசுக் காரர்களும், பதவிக்காரர்களும்  குணமற்றவர்களும்,  நல்ல மனமற்றவர்களும்  வடிகட்டப்பட்டு, நல்லவர்கள் மட்டுமே நட்பாய் கிடைக்கும்! நல்ல நட்பு என்பது  மிகப் பெரும் வரம்! தலைக்கனத்தோடு இருப்பதைவிட, தாழ்வு மனப்பான்மையுடன்  இருப்பதொன்றும் குற்றமெல்ல! காரணம் -...

உளவியல் உண்மை

அப்பா இன்றி வளர்பவர்கள் சமூகத்தில்  தன்நம்பிக்கை இன்றி  வளர்கிறார்கள்... அம்மா இன்றி வளர்பவர்கள் சமூகத்தில் நல்ல பெண்களை சட்டெனக் காதலிக்கிறார்கள்... அப்பாவும், அம்மாவும் இன்றி வளர்ந்தவர்கள் சமூகமே வேண்டாமென்று தனிமையுடன்  ஒதுங்கியே வாழ்கிறார்கள்! . .

அதன் பெயர் இருட்டு!

அது ஒரு கனத்த பறவை. அலகுகள் நீண்ட,  இறக்கைகள்பெருத்த  தந்திரப் பறவை. அழகான எதுவுமற்ற,  பாடவும் தெரியாத குரூரமாகக் கொலைசெய்யும் கொடிய பறவை.  கடும் பசியுடன் வெகு நேரம் காத்திருந்து, இயற்கை ஆடைமாற்றச் சென்ற ஒரு ஆரவாரமற்ற கணத்தில், சூரியனை  கூரான அலகால் கொத்திச் சென்று உயரமான மரத்தின் மேலிருந்த தன் கூட்டுக்குள் ஒளித்துக்கொண்டது..... எப்போதோ கொத்தித் தின்ற சுவையற்ற நிலவின் மிச்சத்தை வானம் நோக்கித் துப்பியது! அநேகமாக, வேறொரு கூட்டிலிருந்து பதப்படுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு சூரியன் நாளை காலை  நன்றாக விடிவதற்குள் நழுவி விழக்கூடும்! விழாவிட்டால், எப்போதோ களவாடிவைத்த மற்றுமொரு சூரியனை அமெரிக்கா மீண்டும்  வானுக்கே அனுப்பும் அல்லது வியாழனை அணுகுண்டால் எரிக்கும். எனவே கவலையில்லை! . .

மைக்ரோ கவிதைகள்

கவிதை - 01 : கடற்கரை விளிம்புகளில் அணைத்துக் கொள்ளும் குடை நிழல்களிலும், பூங்காவில் வண்ணத்திப் பூச்சிகளால் பரிமாறப்படும் முத்தங்களிலும், இளவேனிற் காலத்தில் காமத்தைச் சீண்டியபடி கை கோர்த்துச் செல்லும் கணவன் மனைவியிலும், விரைவில் முடியாத ஒற்றையடிப் பாதைகளிலும், திரையரங்கின் ஒளியற்ற பின்னிருக்கைகளிலும், வகுப்பறையின் கிசு கிசுக்கள் நிறைந்த வெண் சுவர்களிலும்.... தன்னை  இலவசமாக விளம்பரப்படுத்த  முயற்சிக்கின்றது காதல்! * * * * * கவிதை - 02 : எந்தப் புல்லாங்குழலும் இசையைத் தனக்குள் ஒளித்து வைத்திருப்பதில்லை. உன் உதடுகள் எந்த முயற்சியும் எடுக்காதவரை... அவை வெறும்  மூங்கில் துண்டுகள் தான்! * * * * * கவிதை - 03 : என்னுடைய  எந்தக் கவிதையை விடவும் மிகவும் சிறப்பானது எதுவும் எழுதப்படாத ஒரு வெற்றுத்தாள். . .

சின்னச் சின்னக் கவிதைகள்

தொட்டதும் அதிர்கிறேன். மின்னாலும், உன்னாலும்! * கூந்தலைப் பரப்பிவிட்டாய். மிரண்டுபோய் ஒளிந்துகொண்டது இரவு. * தேன் தொட்ட பலாச்சுளைகள் - உன் மேலுதடும், கீழுதடும். * நீ என்னை  அலங்கரிக்கின்றாய்... ஞாபகத்தில் வந்து நின்றது நேர்ந்துவிட்ட ஆடு. * இக்கணமே செத்துப்போவோமா என்கிறாய்... வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே நம் உடல்கள்! * எந்தப்பூக்களும்  தங்களைத் தாங்களே பிய்த்துக் கொள்வதில்லை. காதலில் மட்டும்தான் அப்படிச் செய்வதற்கும் அனுமதியட்டை கிடைக்கின்றது! . .

நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டு

உனக்கு என்னிடம் பிடித்ததே எதற்கும் இணங்கும் இந்த மௌனம் தான் என்று தெரிந்ததும் விழுந்து உடைந்தன - உனக்காக சேர்த்து வைத்திருந்த யேர்மன் தேசத்து வார்த்தைக் கண்ணாடிகள்! நான் கவிதைகளின் காதலன். நீயோ கடனட்டைகளின் சேமிப்பகம்! உனக்கு கவிதை பிடிக்காது என்பதற்காக நான் குற்றவாளி என்று அர்த்தமில்லை! நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டிலிருந்து இத்தாலிய உணவுகளை எதிர்பார்க்கும் பெண்ணே! எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் எட்டியா உதைவாய்? சரி, உன்னை என் குழந்தையாக ஏற்றுக்கொள்கிறேன். காறித் துப்புகிறாயே! பரவாயில்லை, உன்னை கடலலையாக நினைத்துக் கொள்கிறேன். ஒரு கணம் நின்று கேள்! நிராகரிக்கப்பட்டவனின் உணவுத்தட்டென்பது எதிர்பார்ப்புக்களால் மலம் களிக்கப்பட்ட ஏமாற்றத்தைத் தவிர வேறெதுவுமல்ல! . .

வாழ்க்கை எனும் சூத்திரம்

மக்கு மனிதா! சொர்க்கம் என்று நிச்சயமாக எதுவுமில்லை. அது இங்கே தான் இருக்கிறது.... சிலருக்கு போதையின் வடிவில் ( மண் போதை, மது போதை, பண போதை, பதவி போதை, பெண் போதை, பொன் போதை  எல்லாமும் தான்......) சிலருக்கு காதலின் வடிவில், சிலருக்கு காரின் வடிவில், சிலருக்கு i-phone இன் வடிவில், சிலருக்கு android இன் வடிவில்.......... ஆசைப்பட்டதை அடைந்துவிட வேண்டும். எப்படி? நியாயமாக ஆசைப்பட்டு, நேர்மையாக அடைந்துவிட வேண்டும். வாழ்க்கை எனும் சூத்திரத்தில் குழம்பிக்கொள்ள எதுவுமில்லை. அதை இலகுவாக்க ஒரே வழி - தலைகீழாக வைத்துப்படிக்கும் சூத்திரத்தை நேராக வைத்துப்படியுங்கள் அவ்வளவே! நாளைக்கு உண்பதற்காக இன்றைக்குப் பட்டினி கிடப்பதில் அர்த்தம் இல்லை. இளமையை சேமிக்கப் பயன்படுத்திவிட்டு, முதுமையில் எதையும் செலவழிக்கப் போவது கிடையாது! கால இயந்திரம்  கண்டுபிடிக்கப்படும் வரை இறந்த காலத்தை மீண்டும் வாழ்வது இப்போதைக்கு சாத்தியமில்லை. மறந்துவிடாதீர்கள்! இன்பமுற வாழுங்கள்.... பால் போல நுரைக்க நுரைக்க, மூங்கில் போல தழைக்கத் தழைக்க! . .

ஒரு தபுதாரனின் தவிப்பு

என்ன இந்த வாழ்க்கை  ஏன் இப்படிக்கொல்கிறதோ... காதலித்த மனைவியை  காலனிடம் இழந்தவர்களுக்கு  வெற்றுச் சுவரை விட வேறு மார்க்கமேயில்லையா? வேலை விட்டால் வீடு வீடு விட்டால் வேலை என்று சுருங்கிவிட்ட  வாழ்க்கை. நீ அதிகம் விரும்பிய மழையையோ, மலர்களையோ கடற்கரையையோ, காதல்பாடல்களையோ  அனுமதிக்காத வாழ்க்கை. வேலை நேரம் கழிந்து எஞ்சிய வாழ்க்கையை வீடு முழுக்க விரவியிருக்கும் உன் அடையாளங்களும் அவை கொண்ட  நினைவுகளும் தின்கின்றன! சனி, ஞாயிறு, விடுமுறை தினமோ இன்னும் மோசம் இன்னும் மோசம்! காலையில் தரையிலிருந்து என்னை எழுப்பிவிட்டு, குளிக்கும் போதும்,  குடிக்கும் போதும், சமைக்கும் போதும்,  சாப்பிடும் போதும், துவைக்கும் போதும்,  உலர்த்தும் போதும்,  படிக்கும் போதும்,  சுவரை வெறித்துப்பார்க்கும் போதும் கூடவே இருந்துவிட்டு... பிந்திய இரவில் தவறாமல் கண்ணீருடன் தூங்க வைக்கிறது தனிமை. நீ அடம்பிடித்து வாங்கிய கட்டில்,  ஆசையாய் மீட்டும் வயலின், நமக்குள் பரிமாறிக்கொண்ட பரிசுகள், மௌனத்தைப் பேசும்...

தலைவன்

வசந்தம் வருகிறது போகிறது... வரட்சி வருகிறது போகிறது... தலைவன் வருகிறான் போகிறான் ... எப்போதும் போலவே மக்கள் - சிரித்து அழுது புசித்து புணர்ந்து ... வாழ்கிறார்கள். அவர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பதை அவரவர் பசியின் அளவே தீர்மானிக்கிறது. ஆம் மக்கள் வெறும் மக்கள் தான்! . .

கவிதையல்ல!

உத்தரத்தில் தொங்கும் பித்தளை வேலைப்பாட்டில் மயங்குகின்றோம். கீழே மிதிபடும் வைரங்களைக் கவனிப்பதில்லை... * இந்த உலகம் - அழகானவர்களையே எப்போதும் ஆராதிக்கின்றது. அவர்களின் மனங்களின் அழுக்குகள்  மறைக்கப்படுவதால்... அழுக்கானவர்களையோ எப்போதும் அவமதிக்கின்றது. அவர்களின் மனங்களின் அழகுகளை மறந்துவிடுவதால்! * வாழ்க்கை - செதுக்கி வைக்கப்பட்டதென்று யார் சொன்னது? அது ஒரு  அமைப்பற்ற கூழாங்கல். அதை அழகூட்ட முயற்சித்தல் அபாயம் தரும்! . .

மைக்ரோ கவிதைகள் - 04

வெறுமை நிரம்பிய தேநீர்க் கோப்பைக்குள் விண்மீன்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ..... ***** நிகழ்ச்சி நிரலின் நேர அட்டவணையில், கண்ட இடத்தில் கண்களால் சுடப்படும் எனப் போட்டிருக்கிறாய் .... காலையிலா? மாலையிலா? சற்று கணித்துச்சொல்! ***** பிக்காஸோவின் ஓவியமும் நீயும் ஒன்றுதான். இரண்டுமே  கண்களுக்கு அழகானவை. ஆனால் புரிந்துகொள்ளல் கடினம். இரண்டையும் அருகிலேயே வைத்திருக்க நினைத்தல் அதிகப் பிரசங்கித்தனம். ***** உனக்குப் பிடித்தவர்களிடம் உண்மையைச் சொன்னாலும் நம்பமாட்டார்கள். உன்னைப் பிடித்தவர்களிடம் எதைச் சொன்னாலும் உடனே நம்புவார்கள் என்பது நடைமுறை வழக்கம். ***** சுதந்திரம் என்றால் என்ன? அது - கை விலங்கை உடைப்பது அல்ல! இறுகப் பூட்டியிருக்கும்  கை விலங்கை  மணிக்கட்டின் அசைவுக்காக கொஞ்சம் தளர்த்திப் பூட்டுவது. அவ்வளவே! ***** தசையைப் புணர்ந்து,  தசையைப் புசித்து,   தசையை வளர்ப்பது  வாழ்க்கையல்ல. போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொண்ட பெண்கள் புலம்புவத...

காதல் எனும் கடினப்பந்து

எனக்கருகில் ஏகப்பட்ட மனிதர்கள். இருந்தும், இதயத்திற்கருகில் உன்னுடன் சேர்த்து ஒருசிலரே ..... உன்னை விட யாராலும் இவ்வளவு கச்சிதமாக சுழற்றிப்போட முடியாது காதல் எனும் கடினப்பந்தை. வெறி கொண்டமட்டும் கடித்துக் குதறுமாம்  வேங்கை. பதுங்கியிருந்து கழுத்தில் பாய்ந்து நரம்புகள் வெடிக்க பற்களைப் பாய்ச்சி இரசித்துச் செய்யும்  தன் உணவின் கொலையை. சிரித்துக் கொண்டே  சொல்கிறேன்..... காதலும்  அதைத்தானே செய்கிறது. எங்கே என்று பார்த்து விட்டு, உன் வார்த்தைகளுக்கு இடையில் ஒட்டிக்கொண்ட மௌனத்தில் தன் சாமர்த்தியத்தை காட்டிவிட்டு, ஓய்வு நாற்காலியில் போய் உட்கார்ந்து கொல்கிறது காதல்! . . .