கவிதை - 01 :
கடற்கரை விளிம்புகளில்
அணைத்துக் கொள்ளும்
குடை நிழல்களிலும்,
பூங்காவில்
வண்ணத்திப் பூச்சிகளால்
பரிமாறப்படும் முத்தங்களிலும்,
இளவேனிற் காலத்தில்
காமத்தைச் சீண்டியபடி
கை கோர்த்துச் செல்லும்
கணவன் மனைவியிலும்,
விரைவில் முடியாத
ஒற்றையடிப் பாதைகளிலும்,
திரையரங்கின் ஒளியற்ற
பின்னிருக்கைகளிலும்,
வகுப்பறையின்
கிசு கிசுக்கள் நிறைந்த
வெண் சுவர்களிலும்....
தன்னை
இலவசமாக விளம்பரப்படுத்த
முயற்சிக்கின்றது காதல்!
* * * * *
கவிதை - 02 :
எந்தப் புல்லாங்குழலும்
இசையைத் தனக்குள்
ஒளித்து வைத்திருப்பதில்லை.
உன் உதடுகள்
எந்த முயற்சியும் எடுக்காதவரை...
அவை வெறும்
மூங்கில் துண்டுகள் தான்!
* * * * *
கவிதை - 03 :
என்னுடைய
எந்தக் கவிதையை விடவும்
மிகவும் சிறப்பானது
எதுவும் எழுதப்படாத
ஒரு வெற்றுத்தாள்.
.
.
கவிதை 1 மற்றும் கவிதை 2 இரண்டும் கவிதை 3- க்கு அழகு சேர்த்துவிட்டது !
ReplyDeleteகவிதைக்கு பொய் அழகு !
”கவிதை 1 மற்றும் கவிதை 2 இரண்டும் கவிதை 3- க்கு அழகு சேர்த்துவிட்டது !
ReplyDeleteகவிதைக்கு பொய் அழகு !”
ஹா, ஹா, ஹா.....
பாராட்டுக்கு நன்றி முகமூடியணிந்த பேனா!
ஆனால் கவிதை - 03 பச்சை உண்மை.