அனைவருக்கும் எனதன்பார்ந்த வணக்கம்! இறுதியாக இவ் blog இல் எழுதியது 2012 ல், இப்போது 2019. சரியாக 7 வருட இடைவெளி. இந்த 7 வருடங்களும் வாழ்க்கையின் மிகச்சிறந்த படிப்பினை தந்த 7 வருடங்கள். இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேற்றம் தான். இந்த 7 வருடங்களில் உலகமே நிறையவே முன்னேறி விட்டிருக்கின்றது, குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்பில். கைத்தொலைபேசி பாரிய வளர்ச்சி கண்டுவிட்டது. 2012 ல் ஒரு Pc செய்த மாயாஜாலங்களை விடவும் அதிகமாக 2019 ல் சிறு கைத்தொலைபேசி செய்கின்றது. சமூக வலைத்தளங்கள் வேறு கட்டத்தை அடைந்துவிட்டன. ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றக்கூட கூடிய சக்தியாக அவை மாறி விட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான இலவச செயலிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. இது செயலிகள் சூழ் உலகு. செயலிகள் இன்றி எதுவும் அசையாது. பிட்காயின் (Bitcoin) 2012 ல் ஒன்று 13 US$ விற்றது, 2017 ல் ஒன்று 20000 US$ ற்கு சென்றது. இன்றைய தேதியில் ஒரு Bitcoin 10000 US$ ற்கு விற்பனையாகின்றது. போதையில், சுய சிந்தனை இன்றி, தள்ளாடியபடி 2012 ல் Bitcoin வாங்க...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....