அசிங்கங்களின் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள். அசிங்கங்கள் எப்பொழுதும், அழகின் முடிவில், அழகினை முடித்து, ஆரம்பிக்கின்றன. முதலிரவில் என் முதல் புணர்வில் அழகானவைக்குள் விழுந்து அசிங்கத்தில் விழித்துத் தெளிந்தேன்.... அழகுகள் எப்பொழுதும் அசிங்கத்தில் முடிகிறது! அசிங்கங்கள் பற்றித்தான் ஆராய்ச்சி தேவை. இங்குள்ள எல்லாமே அழகாக நினைத்துக் கொள்ளும் அசிங்கங்கள் தான். நான், நீ.... அசிங்கங்களின் பட்டியலில்... அழகு - ஓவியம், அசிங்கம் - சிற்பம். அழகு - புள்ளி, அசிங்கம் - வட்டம். அழகிடம் அசிங்கம் ஒரு முறை தோற்கிறது. அசிங்கத்திடம் அழகு உள்ளவரை தோற்கிறது. முடியில் சுருக்கம் அழகு! முகத்தில் சுருக்கம் அசிங்கமா? அழகு - நுரைக்கிறது. அசிங்கம் - நிலைக்கிறது! அழகைப் பழிக்கவில்லை. அசிங்கத்தைப் பாடுகிறேன்... அசிங்கங்களின் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள். . . .