என் வீட்டின் எதிர் சந்தியில்
எழுதிவிட்டுப்போன
பெருங்காய டப்பாவுக்குள்
எனக்குத் தெரியாமலே
வாழ்க்கையை
ஒழித்து வைத்து,
மறைந்து விட்டாய்.
டப்பாவை மறந்தும் விட்டாய்!
முன் வீட்டு அக்காவின்
பச்சைக் குழந்தை போல,
பகடைக் காயாக
என்னை
உருட்டி உருட்டி
விளையாடிக் கொண்டிருக்கிறது
காதல்!
.
உன் பெயரின்
இறுதி எழுத்துக்களை
யாரோ ஒருவரின்
வெற்றிலைத் துப்பல்
நிறம் சேர்க்கிறது.
முதுகுத் தண்டில்
நீ நகத்தால் கீறுகிறாய்.
வழமை போலவே
திரும்பிப் பார்க்க
தனிமை,
தனிமை,
மற்றும் தனிமை மட்டுமே!
உனது இல்லாமை -
என்னைத் தவிர
எல்லோருக்கும்
செய்தியான
அந்திமப்பொழுதின்
அணைப்பிலிருந்து வெளியே வர
அணைப்பிலிருந்து வெளியே வர
என்னை நீ அனுமதிப்பதில்லை.
பெருங்காய டப்பாவுக்குள்
எனக்குத் தெரியாமலே
வாழ்க்கையை
ஒழித்து வைத்து,
மறைந்து விட்டாய்.
டப்பாவை மறந்தும் விட்டாய்!
முன் வீட்டு அக்காவின்
பச்சைக் குழந்தை போல,
பகடைக் காயாக
என்னை
உருட்டி உருட்டி
விளையாடிக் கொண்டிருக்கிறது
காதல்!
.
.
.
Comments
Post a Comment