Skip to main content

Posts

Showing posts with the label அறிவியல்

அதிஷ்டம் -சிறுகதை

      திருக்கைலாயத்திலே இரவு நாடகங்களை முடித்துக் கொண்டு 52 இன்ச் டிவியை அனைத்துவிட்டு படுக்கைக்கு வந்த பார்வதி மிகவும் ஜோசனையில் இருந்த சிவனை பார்த்து "சுவாமி! என்ன பலத்த ஜோசனையில் இருக்கிறீர்களே என்ன விஷயம்" என கேட்டார். "அதொன்றும் இல்லை பாரும்மா, இவன் என்னுடைய அதீத பக்தன் சிவதாசன் இருக்கின்றானே அவன் மகாஜன சம்பத ஒன்றை வாங்கினான். சரி அவனும் கொஞ்சம் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருக்கின்றான் தானே, அதனாலே அவனுக்கு சூப்பர் பரிசு 5 கோடி பணப்பரிசு விழும்படி செய்தேன். சந்தோசத்தில் துள்ளிக் குதித்த அவன், இரவு படத் தட்டிலிலே அவ் டிக்கட்டை வைத்து, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு விட்டு படுக்கச் சென்றான். காலை எழுந்து பார்த்த போது டிக்கட் தீப் பிடித்து முழுதுமாக எரிந்து விட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போன அவன் என்னை படு மோசமாக திட்டித் தீர்த்து விட்டான். அது தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது" என்றார். அதற்கு பார்வதி" ஏன் நீங்கள் அந்த டிக்கட் எரிவதை தடுக்கவில்லை பிரபு ?" எனக் கேட்டார். நீண்ட பெருமூச்சொன்றை விட்ட படி சிவன் சொன்னார்" இவனுக்கு 5 கோடி...

prof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்!

ஜனவரி 8, prof. Stephen Hawking அவர்களது 70தாவது பிறந்த தினம், அவரை மனதார வாழ்த்திச் சிறப்பிக்கும் முகமாக பகிரப்படும் பதிவு இது. Happy Happy Birthday Dear Stephen Sir............ (:-D) அறிவியலில் ஆர்வமுள்ளவர்களிடம்,  “இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி யார்?” என்று கேட்டால், தயங்காமல் சொல்வார்கள் ஸ்டீபன் ஹௌகிங் (pro. Stephen W. Hawking) என்று. இத்தனைக்கும் அவர் ஒன்றும், ஹொலிவூட் படங்களில் வரும் விஞ்ஞானிகளைப் போல விசில் அடித்தபடி, ஒற்றைக் கையால் கார் ஓட்டுபவரோ அல்லது தனது வசீகரிக்கும் பேச்சாலும் கவர்ந்திழுக்கும் கண்களாலும் பெண்களை தன் வலையில் விழ வைப்பவரோ அல்ல. அவரை முதன் முதலில் பார்க்கும் யாரையும் பரிதாபப்பட வைக்கக் கூடிய நிலையில் இருப்பவர். ஆம், உண்மையில் அவர் ஒரு நோயாளி!. அவர் ALS/MND எனப்படும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர். இங்கு ALS என்பது Amyotrophic Lateral Sclerosis இனையும், MND என்பது Motor Neurone Disease என்பதையும் குறிக்கின்றது. இந்த நரம்பியல் நோயால் வருடந்தோறும் உலகம் முழுவதும் 350,000 பேர் பாதிக்கப் படுவதாகவும், 100,000 பேர் இறந்துப...

கடவுள் ஏன் இல்லை? - ஒரு அறிவியல் நோக்கு!

ம னிதனின் மிக மோசமான கண்டு பிடிப்பு எது என்று யாராவது கேட்டால், பதில் என்னவாக இருக்கும்?  துப்பாக்கியா?,  ஏவுகணையா? அல்லது  அணு குண்டா?  என்னைக் கேட்டால் இவை எதுவுமல்ல என்பேன்.  பதில் கடவுள்!  காரணம் இருக்கின்றது!! இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்துடனோ அல்லது (நமது ?) சூரியன் போன்ற இதர நட்சத்திரங்களுடனோ அல்லது நமது சூரியக் குடும்பத்திலுள்ள ஏனைய கோள்கள் மற்றும் நம் பூமி, இப் பூமியிலுள்ள ஏனைய உயிரினங்களுடனேயோ ஒப்பிடும் போது மனிதன் அதாவது நாகரீகத்தின் பெயரில் மனிதனாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூக விலங்கின் தோற்றமானது புறக்கணிக்கத்தக்க அளவுள்ள வெறும் 200,000 ஆண்டுகள் தாம்.  நம் பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள்!!,(நன்றி  http://en.wikipedia.org/wiki/Timeline_of_evolution  ). பிரபஞ்சத்தின் வயதோ 17.3 பில்லியன் ஆண்டுகள். அத்தனை பில்லியன் ஆண்டுகள் இல்லாத கடவுளை வெறும் 200,000 ஆண்டுகளில் வந்த நாம் தான் படைத்தோம்!    கடவுளின் தோற்றம்  கடவுள் எனும் தோற்றப்பாடு தோன்றுவதற்கு முக்கிய கரணங்கள் எத...