Skip to main content

திமிரன்

 



ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம்.

கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான். 

மதுசூதனன் அத்தகைய ஒருவன். 

திமிரன்! 


எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி...



எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால் யார் தான் வாசிப்பான், சம காலம் அவ்வளவு ஆரோக்கியமானதா இல்லை, இளசுகளுக்கு இப்ப கிளு கிளுப்புத்தான் கேக்குது" என முணு முணுத்த படி கீபோர்ட்டில் அழித்தல் பொத்தானை நோக்கி கையைக் கொண்டு சென்றார் கமலக்கண்ணன். 

மதுசூதனன் கணினியில் திமிருடன் சிரித்துக்கொண்டிருந்தான்..!




Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...