கண்களைத் தானே உருட்டுகின்றாய்? என் நெஞ்சுக்குள் ஏனடி தாயம் விழுகின்றது? நீ வீசிய வெட்கத்தில்தான் கொஞ்சம் - வானத்தில் ஒட்டிக்கொண்டு, இரவுகளில் என்னை இம்சைப் படுத்துகின்றதோ? யாருமில்லா நேரம் பார்த்து, இயலாமை சிலுவையில், தவிப்பு ஆணிகளால் என்னை - ஏன் ரசித்து, ரசித்து அறைகின்றாய்? புரிந்து கொள்! வாழ்க்கை குடுவையை வெற்றுக் கற்களால் நிரப்பிக் கொண்டிருக்கின்றேனே... அது உன்னால் தான்! தூண்டிலின் சொந்தக்காரியே! துடித்துக் கொண்டிருக்கின்றேன்... நீருக்குள் விட்டுவிடு அல்லது நிலத்திலாவது போட்டு விடு... . . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....