நீ சிதறிய வெட்கத்திலிருந்து
மெல்லப் பறந்த - ஒரு
வண்ணாத்துப் பூச்சி
முறைத்துப் பார்க்கிறது.
சில்லென்ற சிரிப்புடன்
அணைக்கிறாள்
மழைப் பெண்.
இருந்தும் வியர்க்கிறேன்...
அருகில்,
மிக அருகில்
உன் அசைவுகள்.
வீட்டுப் பூனையாக
வீறாப்புடன் திரிந்தவனை
கடித்துக் குதறி - உன்
காலடியில் போட்டது
அந்தக் காதல் தான்.
உலகில் பூக்களில்லை.
தினமும் அழகாய்ப் பூக்கும்
உன்னைத் தோற்கடிக்க...
வீட்டில் சாப்பிடமாட்டேன்.
உன்னைப் பார்த்த பின்
பசிப்பதில்லை
என்றெல்லாம் இல்லை.
பார்வைகளால்
உன்னைத் தின்பதே
போதுமாயிருக்கிறது...
என்னமோ கேட்கிறாய்.
சுதாகரித்துக் கொள்ள
அவகாசம் கொடு -
பதிலுகிறேன்...
என் வெப்ப மூச்சை ஆழ்ந்து
ருசிக்கிறாய்.
நாசிக்குள் சென்று உன்
உயிருடன் கலப்பதை
நானும் உணர்கிறேன்.
காதலில் சைவம் கேட்பவன்.
இப்போதைக்கு
அப்பால் போகிறேன்!
.
.
.
Comments
Post a Comment