தொட்டதும் அதிர்கிறேன். மின்னாலும், உன்னாலும்! * கூந்தலைப் பரப்பிவிட்டாய். மிரண்டுபோய் ஒளிந்துகொண்டது இரவு. * தேன் தொட்ட பலாச்சுளைகள் - உன் மேலுதடும், கீழுதடும். * நீ என்னை அலங்கரிக்கின்றாய்... ஞாபகத்தில் வந்து நின்றது நேர்ந்துவிட்ட ஆடு. * இக்கணமே செத்துப்போவோமா என்கிறாய்... வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே நம் உடல்கள்! * எந்தப்பூக்களும் தங்களைத் தாங்களே பிய்த்துக் கொள்வதில்லை. காதலில் மட்டும்தான் அப்படிச் செய்வதற்கும் அனுமதியட்டை கிடைக்கின்றது! . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....