Skip to main content

மனதில் பட்டவை - 2







நாம் எல்லோரும் பைனாகுலர் பயன்படுத்தும் போட்டி ஒன்றில் பங்குபற்றிக் கொண்டிருக்கிறோம். நம் எல்லோரிடமும் விலை கூடிய, அழகான பைனாகுலர் ஒன்று தரப்பட்டிருக்கின்றது. அதை புத்திசாலித் தனமாகப் பயன் படுத்தி வெற்றி பெறாமல், தேவையில்லாத அற்ப விடயங்களில் எல்லாம் நாம் அந்த பைனாகுலரை பெருப்பித்தும், கிட்டவாக்கியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அநத் பைனாகுலரைத் திருப்பி, அதன் மற்றைய பக்கத்தால் பார்க்கும் போது, அது காட்டும் பொருள் சிறிதாகவும், தூரத்திலும் தெரிவதை பெரும் பாலும் மறந்து விடுகிறோம். அப்படி மறந்து விடுபவர்களில் பலர் இந்தப் போட்டியில் தோற்றும் விடுகிறார்கள். 
அந்த பைனாகுலரின் விஞ்ஞானப் பெயர்................வாழ்க்கை!



*



ஓடும் நீர் ஆவியாகி மேலெழுவதும், அந்த நீராவி மழையாகி நிலத்தில் பெய்து மீண்டும் ஓடும் நீருடன் சேர்வதும், அதன் ஒரு கிளை தனியாகச் சென்று உறைந்து போய் பனிக்கட்டி ஆவதும் வாழ்க்கை வட்டத்தின் இயல்பு நிலைகள். என்ன இந்த நீர் நமக்கு அடங்காமல், கட்டுப்பாடுமில்லாமல் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கிறதே என்று ஆத்திரப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஓடுவதால் தான் அது நன்நீர். தேங்கி நின்றால் அதன் பெயர் சாக்கடை! 



* *



எல்லோருக்கும் தாங்கள் செய்யும் செயலுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது, கருத்துக்கள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவர்கள் பேச வேண்டிய இடைவெளிகளை உங்கள் வார்த்தைகளால் நிரப்பாதீர்கள். Don't full fill theirs socks with your bloody legs. உண்மையான குற்றவாளிகளுக்கும் நீதி மன்றத்தில் தங்களை நியாயப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்!




* * *




குறுக்கு வழிகளில் பணம் பார்த்து, தங்கள் குற்றங்களை மூடி மறைத்து சமூகத்தில் தங்களையும் பெரியவர்களாகக் காட்டிக் கொள்பவர்களைப் பற்றிப் பேச எதுவும் இல்லை! பணமும் இளமையும் இருக்கும் வரை வாழ்க்கை இனிமையானது போலத்தான் தெரியும். நேர்மையானவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கேலியும் செய்வார்கள். ஆனால், எதிர்காலத்தில் ஏதாவதொரு வாழ்கைப் புள்ளியில், ஏன் இப்படி வாழ்ந்தோம் என்று அவர்கள் வருத்தப் படுவார்களேயானால், அதுவரை காலமும் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை மொத்தமும் அர்த்தமற்றதாகிப் போய்விடும். 





* * * *




வீட்டுப் பூனை முற்றத்தில் தவறி விழும் குருவிகளை அடித்துத் தின்பதில் இப்போதெல்லம் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆரம்பத்தில் தடுக்கவும் செய்தேன். ஆனால் இப்போது அப்படியில்லை. பூனையின் உணவுச் சங்கிலியில் குருவியும் உண்டல்லவா! இயற்கையின் விதிகளை நாம் மீறக்கூடாது. தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பது தானே இயற்கையின் நியதியும் கூட. குருவிக்கு இறக்கையும் பூனைக்குப் பற்களுடன் கூடிய பசியும் இருக்குமாறு இயற்கை பார்த்துக்கொண்டதில் அர்த்தம் உள்ளது.  



.
* * * * *






நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மன நோயாளிகள் தான். நம் எல்லோருக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான். அவன் எப்போதும் தன்னைவிட வலிமை குறைந்த, பலவீனமான, தன்பேச்சைக் கேட்கக்கூடிய ஒருவனை, குரூரமாக ரசித்து வீழ்த்தி, இரத்தத்தைப் பார்த்துப் பேரின்பம் காண தேடிக்கொண்டிருக்கிறான். அப்படி ஒருவன் கிடைத்தவுடன் அந்த வன்முறையாளன் வெளியே வரவிரும்புகிறான்! நல்ல வேளையாக நாகரீக முன்னேற்றம், கல்வி வளர்ச்சி மற்றும் சட்டதிட்டங்களின் காரணமாக, அந்த வன்முறையாளனை நாம் பெரும்பாலும் கட்டுப்படுத்தி விடுகிறோம். ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த வன்முறையாளனை வெளியே விட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்கிறோம். 


உதாரணமாக சொல்வதானால், தினம் செய்திகளில் வருபவை தான், மருமகளை எரிக்கும் மாமியார், மனைவியின் களுத்தை வெட்டும் கணவன், குழந்தையை சலவை இயந்திரத்திற்குள் போடும் தாய், தற்கொலை குண்டுதாரிகள், போர் வீரர்கள் இப்படி ஏராளம்....... 


ஒருமுறை கோழி வெட்டும் கடையில் போய் நின்று பாருங்கள், அங்கே கோழி வெட்டுபவர், அந்தக் கோழி கதறக் கதற, அதன் களுத்தை அறுக்கவும், அதன் சூடான இரத்தம் அவர் கையில் பட்டவுடன், அவரின் விரல்கள் விழித்துக் கொண்டு, அந்தக் கோழி துடிக்கத் துடிக்க, அதன் இறக்கையை குரூரமாக பிய்த்தெடுக்கும். பின் அதன் நெஞ்சைப் பிளந்து, அதன்  துடித்துக்கொண்டிருக்கும் இதயம்,சூடான ஈரல் என ஒவ்வொரு உறுப்பாக அறுத்து.................... நாமும் அதை இரசிக்கவே செய்வோம். ஒரு முறை youtube இல் போஸ்மார்ட்டம் செய்வதை ஆவலுடன் பார்த்தேன். எனக்குள்ளிருக்கும் வன்முறையாளனை உணர்ந்து கொண்டதும் அப்போதுதான்! உங்களில் ஒவ்வொருவரும், இப்படி ஏதாவதொரு கணத்தில் உங்களுக்குள் இருக்கும் அந்த வன்முறையாளனை உணர்ந்திருப்பீர்கள், மறைக்காமல் நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுங்கள்!


     


.
.

Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...