அது ஒரு சிறிய அறை. ஜன்னலைத் திறந்தால் அன்றி அங்கு வேறு வழியில் ஒளி ஊடுருவ முடியாத படி கட்டப்பட்ட அறை. முன்னர் எப்போதோ சுவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கங்கே தெரிகிறது. ரொம்பச் சின்னதாய் ஒரு மேசை. அதன் மேல் நீல வர்ணத்தில் ஒரு டயரி. யாரோ முன்பு மின் விசிறி பாவித்திருக்க வேண்டும். கூரையில் வளைக்கப்பட்ட இரும்பிக் கம்பி நீண்டு இருந்தது. அறையின் மூலையில் ஒரு உருவம் குந்தி இருக்கிறது. அது அவன் தான் . அது அவனே தான்.அவன் இங்கு இருக்கக் காரணம். அவன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான். அன்று சனிக்கிழமை. சிகிச்சை நிலையத்தில் அன்று சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மாலை நான்கு மணியளவில் அவன் வந்தான். டாக்டர் வெளியே போய் இருந்தார். நான் அவரிடம் உதவியாளனாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில்... அதை விடுங்கள் நான் சொல்ல வந்த விடயமோ வேறு. உள்ளே வந்தவன். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு வந்து கதிரையில் அமர்ந்தான். தான் தற்கொலை செய்யப் போவதாக என்னிடம் சொன்னான். என்ன விளையாடுகிறாயா என்றேன். இல்லை என்றான் ...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....