அவன் பார்த்தான். அவள் சிரித்தாள். அப்போது பிறந்ததை காதல் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டனர் இருவரும்! கடற்கரையில் ஒன்றாக கால் நனைத்தார்கள். வகுப்பறையில் தனியாக முத்தமிட்டுக் கொண்டார்கள். பூங்காவில் மெய்மறந்து அணைத்துக் கொண்டார்கள். இரவுப் பேரூந்தின் இறுதி இருக்கையில் ஒருநாள் எல்லை மீறினான் அவன். ஓர் ஆணின் வித்தைகளை எண்ணி வியந்தாள் அவள். ஓர் பெண்ணின் மென்மைகளை எண்ணி பித்துப்பிடித்தான் அவன். அவளோ தவித்தாள்! தடுக்கவும் மனமில்லாமல், அனுமதிக்கவும் முடியாமல் அவள் தவித்தாள், உச்சத்தை அடைவதற்காகத் துடித்தாள். அவனோ வேண்டுமென்றே மிச்சம் வைத்தான்! அப்போது அவர்கள் இருக்கை முழுவதும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது காமம்! மறுநாள், உபத்திரவமற்ற ஹோட்டல் அறையில், காதலின் பெயரால் அவள் ஆடை களைந்தாள்- உலகத்தின் சார்பாக ஒளித்துவைக்கப்பட்ட அவனது கைபேசியின் கமெராக் கண்கள் அதைப் பதிவுசெய்வதை அறியாமல்! உச்சமடைந்து, உடல்கள் களைத்து, கறைகள் களைந்து, ஆடை அணிந்து அறையை விட்டு வெளியேறினர். கற்பழிக்கப்பட்ட காதல் மட்டும் அவர்க...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....