21/02/2007 நம் கண்கள் சந்தித்த போது எனக்குள்ளே ஏதோ இரசாயன மாற்றம்... உன் சிரிப்பென்ன சிலந்தி வலையா? என் இதயத் தேனீ மாட்டிக் கொண்டதே? என்னை முட்டாளாக்கிய கவிஞன் காதல். கவிஞனாக்கிய முட்டாள் நீ. கொம்பாஸ் பெட்டி முழுக்க என் பறக்கும் முத்தங்களை ஏன் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாய்? பார்ப்போரைக் கொள்ளை கொள்கிறாய். என்னை மட்டும் கொன்று தின்கிறாயே? வகுப்பறை வெண் சுவர்களில் உன்னையும் என்னையும் இணைக்கும் எவ்வளவு கிசுகிசுக்கள்? யாருக்கும் தெரியவில்லை. கண்களால் பார்த்துக்கொண்டு காதலின் பாலர் வகுப்பில் தான் நாம் இருக்கின்றோம் என்று... . . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....