11/08/2006
கண்கள் கலங்கிடும்
என் நிர்ப்பந்தப்
பொழுதுகளுக் கெல்லாம்
நீ தானே முழுக் காரணம்?
காதல் வலியல்ல......
கொடுமை.
கற்றுத் தரத்தான்
நீ வந்தாயா
என் இதயக் கூண்டுக்குள்
பொன்வண்டாய்?
உனக்காக
கவிதை எழுத மட்டுந்தானா
என் இளமை இங்கே
எடுத்துக்கொள்ளப்பட்டது?
நிலவு தொலைந்து,
வசந்தம் வறண்டு,
ரோஜாக்கள்
அழிந்தே போகட்டும்!
நாட்குறிப்பேட்டின்
நாடாவைப் போல,
உன்னுடைய ஞாபகங்களை
வலிகளாய்
என்னுள் செருகியது
வாழ்க்கை.
.
.
.
Comments
Post a Comment