30/04/2007
என் வானத்தை
மீண்டுமொரு முறை
எட்டிப் பார்த்தது
ஏமாற்ற வெண்ணிலவு...
என்னுடைய வானம்
எப்போதாவதுதான் நீலம்.
சூரியன் தான்
இப்போதும்
சுட்டு விட்டுப் போனது.
பூக்களைத் தெரிவது
ஒருபோதும் கூந்தலல்ல!
கடதாசிப் பூக்களாலும்
அதன் மானம்
களவாடப் படுகின்றது...
தென்றல் தேவை என்று
ஒரு தோப்பிடம் சரணடைந்தேன்.
சூறாவளி தந்த விட்டு
என்னைச்
சுகம் விசாரித்துப் பார்க்கின்றதே?
பாலையும்
நீரையும்
பிரிக்கத் தெரியாத
அன்னப் பட்சி தான் நான்.
எனக்குப்
பாலும் சம்மதம்
நீரும் சம்மதம்.
பாடும் பறவையாய் வாழ
யாருக்குத் தான்
ஆசை இல்லை.
சிறகுகள் தான்
சிலருக்கு
முளைக்க மாட்டேன் என்கிறது!
.
.
.
Comments
Post a Comment