Skip to main content

கவிதை எழுதுங்கள்






ன்னை பொறுத்த வரைக்கும் கவிதை என்பது அனுபவத்தில் , உணர்ச்சி வெளிப்பாட்டில் வந்ததாக இருக்க வேண்டும். கண், காது.... போல கவிதையும் ஒரு அங்கம்தான்.


ஆ! என்பதில் கூட்டத்தான் ஒரு அற்புத கவிதை ஒழிந்திருக்கிறதே! எப்படி என்றால், ஒரு வலியின் அத்தனை உணர்ச்சிகளையும் அந்த்த ஆ! அடக்கி வைத்திருக்கிறதே!


யாரோ ஒருவர் சொன்னது போல ஒவ்வொரு கவிதையும் எனக்கு ஒவ்வொரு பிரசவம்! முதல் குழந்தையை பிரசவிக்கும் தாய் போல அத்தனை சுகத்தை அனுபவிக்கிறேன்!எல்லாக் குழந்தையும் அழகாகவோ , நிறைவாகவோ பிறப்பதில்லையே! கவிதைகளும் அப்படித்தான். அழகான குழந்தை ஒருவேளை பெருமையை சேர்க்கலாம், சந்தோசத்தை தரலாம். ஆனால் ஊனமான குழந்தையோ வாழ்க்கையின் அத்தனை படிப்பினை களையும் புரிய வைக்கிறது.

தெருவில் ஊனமான ஒருவரையோ அல்லது பார்வை இழந்தவரையோ பார்க்கும் போதுதான் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்கே புரிகிறது.வீண் ஆடம்பரங்கள், பெருமைகளை தவிர்த்து திருப்திப்பட்டுக் கொள்ள முடிகிறது! ஆக நம் நிறைகளை தெரிந்து கொள்ள ஒரு குறை உள்ளவர் தேவைப்படுகிறது.


கவிதைகளை பலர் பல விதங்களில் விரும்புகிறார்கள் , காதல், கோபம், பயம், வெறுப்பு, இயலாமை.... என நம் உணர்வு வெளிப்பாட்டின் வடிகாலாக கவிதை இருக்கிறது. ஆனால் இந்த i -phone யுகத்தில் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? மனங்களின் உணர்வுகள் இங்கே மரித்துக் கொண்டல்லவா இருக்கிறது! 



சுனாமி எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். எத்தனை உயிர்களை காவுகொண்டது!ஒரு நூற்றாண்டின் துயர சம்பவம் !
அதற்கு அடுத்த சில நாட்களில் எத்தனை ஆயிரம் தூற்றல் கவிதைகள்? கடல் தாயை எதிர்த்து!


எனக்கு எழுத வரவில்லை!
காரணம் :


01 . நல்ல தங்காள் கதை நம் எல்லோருக்கும் தெரியும். இன்றுவரை அவள் குழந்தைகளுக்ககவே பரிதாபப்படுகிறோம். ஆனால் அந்தத் தாய் பட்ட கொடிய வேதனையை நிச்சயமாய் நம்மால் உணரமுடியாது! ஒவ்வொரு குழந்தையாக கிணற்றுக்குள் போடும் போதும் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?


02 . கண்ணை வெறுத்து விட்டு எப்படி காட்சியை கேட்கலாம் ? அதில் நியாயம் இல்லையே!











கவிதையை நம் அனுபவத்தின் மூலம் எழுத வேண்டும், நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். உங்களுக்கு நெருப்பு சுட்டால், அது எனக்கு எப்படி வலிக்கும்? காதல் அற்புதமானது என நான் சொல்வதுக்கும், காதல் அற்புதமானது என நண்பன் சொல்கிறான் என்பதுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?


கவிதையில் இன்று வரைக்கும் என்னால் காதல் என்ற வட்டத்தை தண்டி வெளியே வர முடியவில்லை. ஏனென்றால் காதல் எனக்கு அவ்வளவு அனுபவங்களை தந்துள்ளது! இன்னும் என்னால் சிறப்பானதை தர முடியவில்லை, இப்பொழுதும் முயன்று கொண்டு இருக்கிறேன்!


ஆகவே, கவிதை எழுதுங்கள் !

உங்கள் அனுபவங்களில் நின்று எழுதுங்கள்!
நிச்சயமாய் எல்லோருக்கும் கவிதை வரும். பேருந்தில், குளியல் அறையில், பெரும்பாலும் தனிமையான இரவில்!. இலகுவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எழுதுங்கள்!
நல்ல கவிதை என்றைக்கும் வாழும்!

Comments

Popular posts from this blog

வெட்கத்துண்டை வீசியவள்!

எப்போது பார்த்தாலும்,  படித்தாலும் மனசை கொள்ளை கொள்ளும் தபூ சங்கரின்  காதல் கவிதைகள் நீ! வெனிஸ்வேலா நாட்டுக்காரியை உலக அழகியாகத் தெரிந்தார்கள் - உன்னைப் பார்க்காத முட்டாள்கள்! உன் விரலைப் பிரிந்த  நகத்துண்டு, உன்னை விட்டு உதிர்ந்த  தலை முடி, உன்னை விட்டுத் தவறிய  கைக்குட்டை என எதுவுமே என்னிடம் இல்லை! உன்னை  வேண்டாமென்று வெறுத்தவை  எனக்கெதற்கு? உனக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடுவேனோ  என்ற பயத்தில், நான் ஆசையாக எழுதிக்காட்டும் கவிதைகளில் - நீ ஆர்வம் காட்டமாட்டாய். உடனே  எனக்குள் நினைத்துக் கொள்வேன் - சாதாரண கவிதை மீது ஹைக்கூ ஒன்று பொறாமைப் படுகிறதே என்று! கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்காரன் நான். சமயங்களில் மாறிவிடுகிறேன்... வர்ணக்குடுவை சுமந்துசெல்லும் வண்ணத்துப்பூச்சியாய், உன் உதட்டுச் செம்பில் நிறைந்து வழியும்  புன்னகைப் பாலாய், உன் கண்களின் படபடப்புக்குள் சிக்கிக் கொண்ட  வெட்கத் துண்டாய், மஞ்சள் பூக்களாய், மலை நாட்டுச்  சுடாத வெய்யிலாய், நதிகளை நனைக்கும் சில்லென்ற மழைய...

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

திமிரன்

  ஒருவன் திமிருடன் இருந்தால் அவனிடம் ஏராள பணம் இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அவன் அதிகாரத்தில் இருக்கின்றான் என்றும் அர்த்தமல்ல. மாறாக, மற்ற ஆண்கள் குடித்துவிட்டு வீதியில் வாந்தி எடுத்துக் கொண்டு திரிகையில் தான் குடிப்பதே இல்லை என்கின்ற திமிராக இருக்கலாம். ஒருபோதும் மற்றைய வர்களின் மனது புண்படும் படி பேசியதில்லை என்கின்ற தெனாவெட்டாக இருக்கலாம். ஒருபோதும் பிறரின் பொருட்களுக்கோ சொத்துக்களுக்கோ ஆசைப்படுவதில்லை என்கிற மிடுக்காக இருக்கலாம். பலரைப்போல தவறான வழியில் பணமோ பொருளோ ஈட்டுவதில்லை என்கிற கர்வமாக இருக்கலாம். யாரையும் ஏமாற்றிப் பிழைப்பதில்லை, யாரையும் அண்டிக் கொடுத்து, கோள் மூட்டி விட்டு அதில் சுகம் காணும் நயவஞ்சக குணம் தன்னிடம் இல்லை, வலக்கைக்கு தெரியாமல் இடக்கையால் இல்லாதோருக்கு உதவிகள் செய்பவன் என்கிற பெருமையாக இருக்கலாம். கோடியில் ஒருவனே அவ்வாறு இருப்பான்.  மதுசூதனன் அத்தகைய ஒருவன்.  திமிரன்!  எழுதிக்கொண்டிருக்கும் திமிரன் சிறுகதையில் இருந்து ஒரு பகுதி... எழுதிக் கொண்டிருந்த வேகத்தை நிறுத்தி நிதானமாக ஒருதடவை யோசித்த கமலக்கண்ணன், "இந்தக்காலத்தில இப்பிடி எழுதினால...