நான் இங்கு பேசப் போவது, மன்னார் மாவட்டத்திற்கான மின்பாவனையையும் மின்பட்டியலையும் பற்றி. பொதுவாக இது இலங்கை முழுவதற்கும் பொருத்தமான தொன்றாகவே அமைகிறது.
மேல் வர்க்கத்தினர் ஒருபுறம் இருக்கட்டும் அவர்களுக்கு மின்படியலைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏழைகளுக்கும் கூடப் பிரச்சினை இல்லை. அவர்களின் மின்பாவனையானது ஒரு போதும் கவலை கொள்ளக் கூடியவாறு இருக்கப் போவது இல்லை. ஏனெனில், சிறு கோடுக்கு அருகில் பெரிய கோடொன்றினைப் போடும் போது சிறிய கோடானது ஒருபோதும் பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லைத் தானே? . இங்கு பெரிய கோடானது அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பிரச்சனையைக் குறிக்கின்றது.
நாம் அலசப் போவது இவை இரண்டுக்கும் இடையில், மேல்வர்கமும் அல்லாமல், கீழ் வர்க்கமாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விருப்பமும் இல்லாமல், மத்திய வர்கத்தில், மாத சம்பளத்தில், பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் மக்களைப் பற்றி.
குறிப்பாக இவர்கள் அனைவரின் வீடுகளிலும் மின்பாவனைப் பொருட்கள் நிச்சயம் காணப்படும். வரையறையற்ற விதமாக மின் சாதனங்களைப் பாவிப்பதும், பின்னர் மின்பட்டியல் அதிகமாக வந்துவிட்டதே என்று புலம்புவதும், மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை வழமையானதொரு விடயமாகும்.
மின்னலகிற்கான பெறுமதிப் பட்டியல் இதோ:
மின்னலகுகள், அலகிற்கான பெறுமதி, நிலையான கட்டணம் என்பன முறையே:
வீட்டு மின் பாவனை (D-1):
(0 - 30) - (3.00) - (60) /
(31 - 60) - (4.70) - (90) /
(61 - 90) - (7.50) -(120) /
(91 - 180) - {20.80 with fuel charge} - (180) /
(181 - 600) - {32.50 with fuel charge} - (240) /
(600அலகுகளுக்கு மேல்) - {39.00 with fuel charge} - (240)
சமய ஸ்தாபனங்கள் (R-1):
(0 - 30) - (2.50) - (60) /
(31 - 90) - (3.70) - (90) /
(91 - 120) - (9.00) - (180) /
(121 - 180) - (10.00) - (180) /
(181 அலகுகளுக்கு மேல்) - (12.50) - (240)
பொது ஸ்தாபனங்கள் (GP-I & GP- II ):
(0 - எந்தவொரு அலகிற்கும்) - {19.50 with fuel charge} - (240)
இயந்திர கைத்தொழில் (I-I & I-II) :
(0 - எந்தவொரு அலகிற்கும்) - (10.50) - (240)
மேலே காணப் படுவது 30 நாட்களுக்கான பட்டியல் ஆகும். இதுவே 25 நாட்களுக்கெனின், பட்டியல் ஆனது (0 - 25) என ஆரம்பிக்கும். இதுவே 40 நாட்கள் எனின் (0 -40) என ஆரம்பிக்கும்.
பொதுவாகவே மக்கள் 90 அலகுகளிற்கு மேலாகப் பாவித்தால் வட்டி அறவிடப்படும் எனப் பிழையாக விளங்கி வைத்திருக்கிறார்கள். உண்மையில் அப்படியல்ல.
மின் பட்டியலானது, 30 நாட்களுக்கு விநயோகிக்கப் பட்டிருந்தால் மட்டுமே 90 அலகுகளுக்கு மேல் பாவிக்கும் போது எரி பொருள் விதிப்பனவு விதிக்கப்படும். இதனையே மக்கள் வட்டிஎனப் பிழையாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.
இன்னும் விளக்கமாகப் பார்த்தோமானால், 25 நாட்களுக்கான பட்டியல் எனின் விதிப்பனவானது 75 அலகுகளுக்கு மேல் அறவிடப்படும்.
35 நாட்களுக்கான மின் பட்டியல் எனின் விதிப்பனவானது 105 அலகுகளுக்கு மேல் அறவிடப் படும். அதாவது மும்மடங்காகக் கருத்தில் கொள்ளப் படும்.
மின் பட்டியலானது எத்தனை நாட்களுக்கானதாக வந்துள்ளதோ அத்தனை நாட்களையும் 3 ஆல் பெருக்கி, வரும் பெறுமான அளவிலும் அதிகமாக மின்னலகுகள் பாவிக்கப் பட்டிருக்குமெனில் எரிபொருள் விதிப்பனவு அறவிடப்படும்.
அத்துடன் மும்மடங்கிலும் குறைவானதாக, மாதத்திற்கான மின்னலகுகள் பாவிக்கப் பட்டிருப்பின் கழிவும் வழங்கப்படும்.
அதாவது
30 நாட்களுக்கான மின் பாவனை 28 அலகுகள் எனின் 30 ரூபாய் கழிவுடன்
{ (28 * 3 + 60) - 30 = 114} ரூபாய் அளவிடப் படும்.
இக்கட்டுரையைப் படிக்கும் மன்னார் மக்களால் நிச்சயமாய் இத் தகவல்களை விளங்கிக் கொள்ள முடியும்.
மன்னார் மக்கள் இவற்றினைப் படித்து தம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், பயன்பெறவும் வேண்டும் என்கிற நோக்கிலேயே இவை வெளியிடப் படுகின்றது. ஆனாலும் இக்கட்டுரை எவ்வளவு தூரம் அவர்களைச் சென்றடையும் என்பது உண்மையில் கேள்விக் குறிதான்.
மன்னார் மாவட்டத்தின் கணினி அறிவையும், இணைய பயன்பாட்டையும் பேச முனைந்தால் புதிதாகக் கட்டுரையே வெளியிடலாம். இப்போதைக்கு நான் விடை பெறுகிறேன்.
பின் குறிப்பு : இவர்யார் எங்களுக்கு அறிவுரை கூற என யாரும் நினைத்தால் அவர்களுக்காக - நான் மன்னார் மாவட்டத்திற்கான மின்மானி வாசிப்பாளர்.
தொழிலைச் செய்தோமா சம்பளத்தைப் பார்த்தோமா என்று இல்லாமல், தங்கள் சமுதாயக் கடப்பாட்டை மேச்சுகின்றேன்.
ReplyDeleteதொழிலை தெய்வமாக எண்ணுவோர் கடவுளின் வரத்தை நிச்சயமாகப் பெறுவர்.
நன்றி பிரபா. வேலையை இஷ்டத்துடன், விரும்பிச் செய்தால் அதன்மேல் மதிப்பு தானாக வரும். ஆனால் எத்தனை பேர் தமது வேலையை பெருமையுடன், விரும்பிச் செய்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி!
ReplyDelete