05/04/2009
உருவம் அருவமற்ற
உன்னத உணர்வென
கடவுளைச் சொல்கிறார்கள்...
நாத்திகன் எனக்கு
உன் நட்புத்தான் அப்படி.
நான்
நோயில்
வாடும் போதும்,
தோல்வியால்
துவளும் போதும்,
கண்ணீரால் நனைவது
உனது கண்கள் தானே?
ஊடல் கொள்பவன்
நான் தான்.
சற்றைக்கெல்லாம்,
மன்றாடி
மன்னிப்புக் கேட்பது
நீயல்லவா?
நான் இருட்டுக்குள்
தொலைப்பவன்.
நீ வெளிச்சத்தில்
என்னைத் தருபவள்...
என்ன வரம்
வேண்டும் என்றால்
என் நிழலாய் இருப்பதே
போதும் என்கிறாய்!
என்னை தொடர்வதில்
உனக்கு
அத்தனை பெருமையா?
தொப்புள் கொடியால்
நாம் இணையவில்லை.
ஆனாலும் நீயெனக்கு
இன்னுமொரு தாய் தான்...
என்னிலிருக்கும்
நம்மை நம்புகின்றேன்.
நீ தலையசைத்தால்
உன் உள்ளங்கையில்
என்னுயிரையும்
கிள்ளி வைப்பேன்...
.
.
.
Comments
Post a Comment