இலங்கை மின்சார சபையின் பிராந்தியத்திற்கான பண்டகசாலை(depot) இலே ( மக்கள் இதனை மின்சார சபையின் காரியாலயம் என்றே விளிக்கிறார்கள்.ஆனால் இது பண்டகசாலை என்பதே உண்மை. மின் இணைப்புகளின் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால் மட்டுமே அப்பிரதேசத்தில் காரியாலயம் ஓன்று உருவாக முடியும்) இன்று (03/05/2010) புதிய மின் இணைப்பைப் பெறுவதற்கான பத்திரங்களைச் (form)சமர்ப்பிற்பதர்காக என்றும் இல்லாதவாறு (வரலாற்றிலேயே முதன்முறையாக என்பதைக் குறித்துக் கொள்ளவும்) மக்கள் கூட்டம் அலைமோதியது.
எப்போதுமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் இங்கு இவ்வாறானதொரு நெருக்கடி நிலை காணப் படுவதானது ஆச்சரியமானதொரு அசாதாரண நிகழ்வாகும்.
இச்சம்பவத்தினால் உண்டான ஆச்சரிய மேலீட்டால் (இன்னும் கூட மூக்கின் மேல் விரலை வைத்திருக்கும்), மன்னார் பிராந்தியத்தின் மின்மானி வாசிப்பாளராகப் பணியாற்றும் கஜேந்திரன் என்பவர் தெரிவிக்கையில், "இவ்வாறு பெருமளவான மக்கள் கியூவில் நின்று, புதிய மின் இணைப்பைப் பெறுவதற்காக காத்திருந்தமையை இன்று தான் முதன் முதலாகக் காண்கிறேன்" என்றார். மேலும் இது பற்றி அவர் தெரிவிக்கையில்," வேளாண்மை செய்தவர்கள் வெட்டு முடிந்ததும் கிடைத்த பணத்தைக் கொண்டு புதிய மின் இணைப்பைப் பெற வந்திருக்கலாம்" எனவும் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்டு தற்போது விடியலை நோக்கியிருக்கும் வன்னி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
"புதிய மின் இணைப்புகளை பணம் செலுத்தியே பெற்றுக் கொள்கிறார்கள், சட்டத்திற்குப் புறம்பாக, களவாகக் கொளுவி எடுக்க முனையவில்லை என்பது மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் சிறப்பான விடயம் தான்" - அங்கு பணியாற்றும் சிலரின் வேடிக்கையான பேச்சு எனக்கும் கேட்டது.
Comments
Post a Comment