இ லங்கை மின்சார சபையின் பிராந்தியத்திற்கான பண்டகசாலை(depot) இலே ( மக்கள் இதனை மின்சார சபையின் காரியாலயம் என்றே விளிக்கிறார்கள்.ஆனால் இது பண்டகசாலை என்பதே உண்மை. மின் இணைப்புகளின் எண்ணிக்கை 15000 ஐ தாண்டினால் மட்டுமே அப்பிரதேசத்தில் காரியாலயம் ஓன்று உருவாக முடியும்) இன்று (03/05/2010) புதிய மின் இணைப்பைப் பெறுவதற்கான பத்திரங்களைச் (form)சமர்ப்பிற்பதர்காக என்றும் இல்லாதவாறு (வரலாற்றிலேயே முதன்முறையாக என்பதைக் குறித்துக் கொள்ளவும்) மக்கள் கூட்டம் அலைமோதியது. எப்போதுமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் இங்கு இவ்வாறானதொரு நெருக்கடி நிலை காணப் படுவதானது ஆச்சரியமானதொரு அசாதாரண நிகழ்வாகும். இச்சம்பவத்தினால் உண்டான ஆச்சரிய மேலீட்டால் (இன்னும் கூட மூக்கின் மேல...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....