மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே கணினியின் சித்து விளையாட்டுப் புரிந்துவிடும். இப்படித் தான் சமீப காலமாக இலங்கையில், அதுவும் வட மாகாணத்திலே இது போன்ற மாய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பொக்கணைப் பகுதியில் பிடிபட்டதாகச் சொல்லி, photoshop மூலமோ அன்றி வேறு software மூலமாகவோ வடிவமைக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தைப் பற்றி அதிகம் பேசப்பட்ட்டது. கீளே உள்ள படத்தைப் பார்க்கவும். நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் உள்ள சூட்சுமங்கள் தெரிந்துவிடும். அட அட, என்ன அழகாக போட்டோவிற்குப் போஸ் கொடுக்கிறது பாருங்கள். “ என்னை அழகாகக் கிளிக் செய். நானுனக்கு வைரம் தருகிறேன்” என்று பாம்பு சொல்லியிருக்குமோ? இப்படம் பொய்யானது என்பதற்கான காரணங்கள் : * இப்படத்தில் காணப்படும் பாம்பின் நிழல் ஒருதலைப் பாம்பிற்குரியது. (ஒருதலைப் பாம்பின் படத்தை எடிட் செய்திருக்கிறார்கள்) * இப்படம் (ஒரு தலைப் பாம்பு) தேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் என்பது அதன் தரத்திலேயே தெரிகின்றது.(இந்தப் பதிவில் இப்படத்தை இணைக்கும் போது அதன் தரம் சற்றுக் குறைந்து விட்டது ) டிஸ்கவரி நிகழ்ச்சிகளிலெல்லாம...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....