Skip to main content

ஐயோ பாம்பூ!



மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே கணினியின் சித்து விளையாட்டுப் புரிந்துவிடும். இப்படித் தான் சமீப காலமாக இலங்கையில், அதுவும் வட மாகாணத்திலே இது போன்ற மாய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பொக்கணைப் பகுதியில் பிடிபட்டதாகச் சொல்லி, photoshop மூலமோ அன்றி வேறு software  மூலமாகவோ வடிவமைக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தைப் பற்றி அதிகம் பேசப்பட்ட்டது. கீளே உள்ள படத்தைப் பார்க்கவும்.



நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் உள்ள சூட்சுமங்கள் தெரிந்துவிடும். அட அட, என்ன அழகாக போட்டோவிற்குப் போஸ் கொடுக்கிறது பாருங்கள். “ என்னை அழகாகக் கிளிக் செய். நானுனக்கு வைரம் தருகிறேன்” என்று பாம்பு சொல்லியிருக்குமோ?

இப்படம் பொய்யானது என்பதற்கான காரணங்கள் :

* இப்படத்தில் காணப்படும் பாம்பின் நிழல் ஒருதலைப் பாம்பிற்குரியது.  (ஒருதலைப் பாம்பின் படத்தை எடிட் செய்திருக்கிறார்கள்)

*  இப்படம் (ஒரு தலைப் பாம்பு) தேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் என்பது அதன் தரத்திலேயே தெரிகின்றது.(இந்தப் பதிவில் இப்படத்தை இணைக்கும் போது அதன் தரம் சற்றுக் குறைந்து விட்டது ) டிஸ்கவரி நிகழ்ச்சிகளிலெல்லாம் பார்த்திருப்போம். அதேபோல காத்திருந்து, எந்த இடையூறும் இல்லாமல், உயர் ரக கமெராவால் எடுக்கப் பட்டிருக்கிறது என்பதனை, படத்தைப் பார்க்கும் போதே ஊகித்தறியலாம். சாதாரண கமெராவுள்ள தொலைபேசி மூலம் இப்படித் தரமாக படம் எடுக்க முடியாதல்லவா?

* இப்படி உண்மையில் இருந்திருந்தால், நம்மவர்கள் அதனை இப்படிச் சுதந்திரமாக விட்டிருப்பார்களா என்ன? மக்கள் கூட்டத்தைப் பார்த்தும், அவர்கள் போடும் கூச்சலைக் கேட்டும் அந்தப் பாம்பு பயத்தில் ஓடிவிடாமல் நின்று படத்திற்குப் போஸா கொடுக்கும்?


இனி உங்களுக்காக .....




இப்படத்தை உருவாக்கியவர்களை உண்மையில் பாராட்டத் தான் வேண்டும். மெத்தப் படித்தவர்களையும் கடவுள் பெயரால் கண்மூடித்தனமாக நம்ப வைத்தவர்கள் அல்லவா?
கற்பனைத் திறன் என்பது எம்மவர்களுடன் இன்று நேற்றல்ல, காலங் காலமாக, பல ஆயிரம் வருடங்களாக வந்துகொண்டிருக்கும் ஒன்று. பல கர்ண பரம்பரைக் கதைகளிலும், நூல்களிலும், இதிகாசங்களிலும் இல்லாத கற்பனைத் திறன்களா? ஆனால் என்ன அதனை இன்று வரைக்கும் கடவுளோடு சம்பந்தப் படுத்தி மீண்டும்,மீண்டும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் கவலை தரும் விடயம்.  நாளைய சந்ததியை இப்படியான மூட நம்பிக்கைகளுக்கு காவுகொடுப்பதோ அல்லது நல்ல அறிவியலை ஊட்டி அறியாமை எனும் களையை பிடுங்கி எறிந்து, ஊட்டமான சந்ததியை உருவாக்குவதோ நம் கைகளிலேயே உள்ளது.

அது வரைக்கும் எமக்கு அறிவியல் முன்னேற்றமென்பது மந்தகதியில் தான் அமையும்!
அதுவரைக்கும் பட்டினி கிடந்து உங்கள் கடவுளுக்கு உணவு படையுங்கள்!
அதுவரைக்கும் உங்கள் கடவுளைக் குளிப்பாட்டுங்கள், ஆடையுடுத்துங்கள், நகை அணிவியுங்கள், நகை களவு போய்விடும் என்று உங்கள் கடவுளைப் பூட்டுப் போட்டு பூட்டியும் வையுங்கள்!!

கிணற்றுத் தமிழா எப்போது வெளியே வரப்போகிறாய்???
.
.
.


Comments

  1. அருமையான விஷயம் கடைசியில் சொன்ன விடயம் உற்றுநோக்குதற்குரியது .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...