Skip to main content

Posts

Showing posts with the label பாடல்வரிகள்

காதல் படிக்கட்டில்

(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... ) ஆண் குரலில் : காதல் படிக்கட்டில் நான் கடைசியில் நிற்கின்றேன். என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே! கவனிக்க மாட்டாயா? என் கண்களைப் பாரம்மா. இந்தக் கவிதையைக் கேளம்மா... காதல் என்றால் கொடுமையல்ல புரிந்து கொள்ளம்மா. வகுப்புக்கு நீ வருவாய். என்னை விட்டு  தூரத்தில் போய் அமர்வாய். இந்த இடைவெளி அளவு குறையாவிட்டால் கணிதமும் கசந்துவிடும். மலர்களை விரும்புகிறாய் அதை முள்ளுடன் பறிக்கின்றாய். முள் நான், மலர் நீ சேர்ந்தே இருக்கணும் விளங்கிக் கொள்வாயா? இந்தக் காதல் தவிக்கும்படி உன் கண்களும் பழிக்குதடி. நிலவொளி என்பது முற்றத்தில் விழுவது கால்கள் மிதிப்பதற்கா?. என் கூடவே வருகின்றாய். பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய். அதில் என் பெயர் கேட்டதும்  உன் முகம் சிவந்ததை  என்னிடம் மறைக்காதே! அடி வெல்வெட் துணித்துண்டே! என்னை வெறுப்பதாய் நடிக்காதே! உன் உதடுகள் சொல்வதும் இதயம் நினைப்பதும் நிச்சயம் ஒன்றல்ல. உன் கைவிரல் அணைப்பிற்குள் தங்க மோதிரம் துயில்கிறதே... அதில் உன் பெயர், ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...

உயிருக்குள் நனைகிறேன்

: ஆண்    இளந்தேனையும் பாலையும்  கலந்து செய்துவைத்த  சிலை நீயோ? இதமாக இதமாக   என் காதில் இனித்திடும் இசை நீயோ? * காதலின் தூறலில்         உன் கண்களின் ஈர்ப்பினில்         விரல்களின் ஸ்பரிசத்தில்           உயிருக்குள் நனைகிறேன். : பெண்      காதலின் தூறலில்         உன் கவிதையின் ஈர்ப்பினில்         ஆண்மையின் ஸ்பரிசத்தில்         உயிருக்குள் கரைகிறேன். *  : ஆண்  உன்னைப் பார்க்கையில்      ஏனடி என் நெஞ்சில்   இத்தனை படபடப்பு? உன்னோடு பேசையில்         ஏனடி என் உயிருக்குள்    இந்த சல சலப்பு? * : பெண்        அருகினில் இருக்கிறாய்         அவஸ்தைகள் செய்கிறாய்         என்னையே பார்க்கிறாய்        ...