(பாடலை சந்தத்துடன் படிக்கவும்...: ரானா ரனனானா, ரா ரனனன ரானானா... ) ஆண் குரலில் : காதல் படிக்கட்டில் நான் கடைசியில் நிற்கின்றேன். என்னைக் கடந்து செல்லும் பெண்பூவே! கவனிக்க மாட்டாயா? என் கண்களைப் பாரம்மா. இந்தக் கவிதையைக் கேளம்மா... காதல் என்றால் கொடுமையல்ல புரிந்து கொள்ளம்மா. வகுப்புக்கு நீ வருவாய். என்னை விட்டு தூரத்தில் போய் அமர்வாய். இந்த இடைவெளி அளவு குறையாவிட்டால் கணிதமும் கசந்துவிடும். மலர்களை விரும்புகிறாய் அதை முள்ளுடன் பறிக்கின்றாய். முள் நான், மலர் நீ சேர்ந்தே இருக்கணும் விளங்கிக் கொள்வாயா? இந்தக் காதல் தவிக்கும்படி உன் கண்களும் பழிக்குதடி. நிலவொளி என்பது முற்றத்தில் விழுவது கால்கள் மிதிப்பதற்கா?. என் கூடவே வருகின்றாய். பேரூந்தின் பாடல்கள் இரசிக்கின்றாய். அதில் என் பெயர் கேட்டதும் உன் முகம் சிவந்ததை என்னிடம் மறைக்காதே! அடி வெல்வெட் துணித்துண்டே! என்னை வெறுப்பதாய் நடிக்காதே! உன் உதடுகள் சொல்வதும் இதயம் நினைப்பதும் நிச்சயம் ஒன்றல்ல. உன் கைவிரல் அணைப்பிற்குள் தங்க மோதிரம் துயில்கிறதே... அதில் உன் பெயர், ...
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....