தற்காலத்தில் ஆங்கில மொழியின் அவசியத்தையோ அல்லது அதன் ஆதிக்கத் தன்மையையோ யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது; அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.
பெரும் பாலான வளர்ந்த நாடுகளில் ஆங்கில மொழியானது தாய் மொழியாக அல்லது அரச கரும மொழிகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் எம்மைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தான் ஆங்கில மொழி கற்றல் பற்றிய பிரச்சினையே எழுகின்றது.
ஆம், எம் போன்ற நாடுகளில் ஆங்கில மொழி அரச கரும மொழிகளில் ஒன்றாகவே உள்ளது. அரசாங்கத்தின் மூலம் நாட்டில் ஆங்கில மொழியை வளர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள ப்படுகின்றன. ஆனால் அவை நாட்டின் எல்லாப் பகுதியினரையும் சென்றடைகின்றதா என்றால், பதில் கேள்விக் குறியே!
நகரங்களைப் பொறுத்தவரை, அனைத்து வித வளங்களும் உட்ச பட்ச அளவில் கிடைப்பதாலும், ஆங்கிலத்தில் பேசுவது மேல் தட்டு மக்களால் நாகரீகமாகக் கருதப்படுவதாலும், அங்கே ஆங்கில மொழியின் பிரயோகம் தரமானதாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதற்காக, நகரங்களில் வாழும் எல்லோருமே ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள் என்று அர்த்தமும் இல்லை.
இதை விட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆங்கிலத்தின் நிலை இன்னும் மோசம். இவற்றுக்கான காரணங்களில் முக்கியமாக இருப்பது யாதெனில், ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அதனை இன்னுமொரு மொழியாகவே பார்க்கின்றனர். ஆனால் ஆங்கில மொழி தெரியாதவர்களோ அதனை ஒரு உன்னத திறமையாகவே பார்க்கின்றனர். அது மிகவும் பிழையான ஒரு கருதுகோள். மொழி என்பது கண்டுபிடிக்கப் பட்டதே தொடர்பாடலை இலகுவானதாக ஆக்குவதற்கு மட்டுமே.
ஆங்கிலம் கற்பதில் உள்ள அடிப்படைத்தவறு :
நன்றாக ஞாபகப்படுத்திப்பாருங்கள், உங்கள் தாய் மொழியை அது எதுவாக இருப்பினும், உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு கற்க ஆரம்பிக்கின்றீர்கள்?
ஆம், முதலில் அந்தமொழியைக் கேட்பதன் மூலம் (Listening) அந்த மொழியுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள். பின்னர் கேட்ட வார்த்தைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சொல்லாக, மழலை மொழியில், பல வேளைகளில் தவறுதலாகவும் பேச ஆரம்பிக்கின்றோம் (Speaking). பின்னர் எழுதவும் (Writing), இறுதியாக வாசிக்கவும் (Reading) பழகுகின்றோம். அதுவே ஒரு மொழியைக் கற்பதற்கான இயல்பான முறையாகும். அதனால் தான் எமது தாய் மொழியில் எம்மால் அவ்வளவு பரிச்சயமாக இருக்கமுடிகின்றது. ஆனால் ஆங்கில மொழியையும் நாம் அப்படித்தான் இயல்பாகக் கற்கின்றோமா என்றால், பெரும்பாலும் அதற்கான பதிலை இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால் நாம் ஆங்கிலத்தை மிகப்பிழையான முறையிலேயே கற்கின்றோம் முக்கியமாக கற்பிக்கப்படுகின்றோம்.
ஆங்கிலமொழி கற்றல் மற்றும் கற்பிற்பதில் உள்ள மேலதிக தவறுகள் :
ஆங்கிலம் பேச வேண்டும் என்கின்ற ஆசையில், தனியார் கல்வி நிறுவனங்களின் அதீத விளம்பரங்களில் ஏற்படும் ஈர்ப்பின் காரணமாக, அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி Spoken English Class களில் போய் சேர்ந்து கொண்டு பணத்தை வாரி இறைக்கின்றோம். அங்கே கற்பிக்கப் படுவதெல்லாம் English Grammar மட்டுமே.
(எத்தனை பேர் ஆங்கில ஒலி உச்சரிப்பு முறைகள் பற்றிச் சொல்லித்தருகின்றனர்?) படித்து முடித்து வெளியே வரும்போது, எத்தனை பேர் ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களாக வெளியே வருகின்றோம்?
இந்த நிலைக்குக் காரணம் ஒன்றுதான். அதாவது ஆங்கிலத்தை நாம் தலை கீழான முறையில் கற்கின்றோம். Listening > Speaking > Writing > Reading என்ற வரிசையில் கற்காமல், பெரும்பாலும் Writing மற்றும் Reading உடன் நிறுத்திக்கொள்கின்றோம். ஆங்கிலத்தை செவிமடுத்துக் கேட்பதும் இல்லை, பேச முயற்சிப்பதும் இல்லை. பின்னர் எப்படி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது??
ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவும், அவ் அழகான மொழியை சிறப்பாகப் பேசவும் அடிப்படை வழி முறைகள் மிகவும் முக்கியம்.
ஆங்கிலத்தை கேட்பதற்கும், பேசுவதற்குமான பயிற்சி முறைகள் (சொந்த அனுபவத்திலிருந்து) :
* நல்ல தரமான ஆங்கில அகராதியை சொந்தமாக எப்போதும் கூடவே வைத்திருங்கள். அதன் மூலம் தினம் குறைந்தது பத்துப் புதிய சொற்களாவது அறிந்து கொள்ளுங்கள். இதற்காக English to Tamil அகராதியை விட English to Tamil அகராதியே பயன் அதிகம் தரக்கூடியது.
* விளையாட்டு வர்ணனையை செவிமடுத்துக் கேட்கலாம். (உங்களுக்கு எதிராக நிறைய விமர்சனம் வரும். Never Never Give Up)
உதாரணமாக கிரிக்கட் வர்ணனை. இதன் மூலம் பல புதிய அழகிய வார்த்தைகளைக் கேட்கலாம்.அர்த்தம் புரியாவிட்டால், அகராதியின் உதவியுடன் அவ் வார்த்தைகளின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன் ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் (English pronunciation), எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம். எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதற்கு சரியான உதாரணம் - சனத் ஜெயசூரியா.
* சிறுவர்களுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள், கார்டூன்களை ஆழ்ந்து கேட்டல். (கிண்டல் செய்வார்கள். Never Mind It )
* Discovery போன்ற Channelகள், News Channelகள் மற்றும் ஆங்கிலப் படங்களை Sub Title உடன் பார்த்தல்.
* ஆங்கில செய்தித்தாள்கள், ஆங்கில சஞ்சிகைகள், ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் என்பவற்றை தெளிவாக உரத்துப் படித்தல்.
* உங்களுக்குள் நீங்களேயோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ ஆங்கிலத்தில் கதைத்துப் பழகலாம். பிழைகள் வரும்; வந்தால் நல்லது, ஏனென்றால் நீங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. முயற்சி செய்கின்றீர்கள்!
* On line இல் கிடைக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி நெறிகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
மேலே குறிப்பிட்டவை யாவும் நான் கடைப்பிடித்த வெற்றிக்கான வழி முறைகள்.ஆங்கில இலக்கணப் பயிற்சி முறைகள் பற்றிக் குறிப்பிடாததற்கு முக்கிய காரணம், ஆங்கிலம் என்றாலே நாம் முதலில் இலக்கணத்தைத் தானே படித்துத் தொலைக்கின்றோம்!. இவற்றை விடவும் இன்னும் பலவும் இருக்கலாம். இவற்றை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும் என்று நினைக்கின்றேன். இவை எல்லா வற்றையும் விட முக்கியம் முயற்சி! விடா முயற்சி!!
ஆங்கிலத்தில் ஒரு அறிஞர் சொன்னார் : Hard work is a best investment a man can make என்று. அதாவது ஒரு மனிதனின் சிறந்த முதலீடே அவனது கடின உழைப்புத்தான் என்று.
ஆங்கிலம் பேச முடியவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்? இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை. முயற்சி செய்யுங்கள்; வெற்றி நிச்சயம்! ஏனென்றால் நான் A/L இல் ஆங்கிலப் பாடத்தில் B தரத்தினைப் பெற்றவன். ஆனால் அது ஒன்றும் சும்மா வந்து விட வில்லை. முதல் முறை F இனைப் பெற்று, பின்னர் கடின முயற்சியாலேயே B பெற்றேன் என்பதை வெளிப்படையாக, நேர்மையாகவும், பெருமையுடனும் கூறிக்கொள்கிறேன். முயற்சி செய்யுங்கள்!!
:-D
nice. if i need to learn english quickly, what will i do?
ReplyDeleteGood message thanks' for you
ReplyDeleteஆங்கிலத்திற்கு அருமையான யோசனைகள்
ReplyDeleteநன்றி பல
காஞ்சி சங்கத்தமிழன்
ஆங்கிலத்திற்கு அருமையான யோசனைகள்
ReplyDeleteநன்றி பல
காஞ்சி சங்கத்தமிழன்
very nice message.but i don't speak much english
ReplyDeleteOver 350 million people speak english as there is first language. including 55 million in the uk and more than 200 million in the usa. it's an official language in over 50 countrys in the world
ReplyDeletethe total number of people who can speak english,including those who speak it as a second language. is well over a billion.
ReplyDeleteenglish is a relatively easy language to learn with a little practice.you should soon find yourself able to get by in most everyday situation:-P
SO WHY LEARN ENGLIS?
ReplyDeleteAN INTERNATIONAL LANGUAGE.
learn to speak english will allow you to get comunicate with a variouse of people around the globe.
AND BOOST UR BUSINESS PROSPECT AND TRAVEL.
வாழ்த்துக்களுடன் நாமக்கல் ரமேஷ்.
நான் பரிந்துரைக்கிறேன் penpaland.com மொழி பரிமாற்றம் சார்ந்த இணைய
ReplyDelete