எதுவும் நடக்கவில்லையே என்கிற யோசனையில் அதிகம் நகம் கடிப்பவரா நீங்கள்.?
அப்படியாயின் நல்லது.
நீங்கள் ஒன்றும் வீண் பொழுது போக்கவில்லை. உங்கள் நகத்தைச் சுத்தமாக்குவதில் நேரத்தை முதலிடுகிறீர்கள் என்று அர்த்தம்!
................................................................................................................................................................
நண்பர்கள் மேல் கோவமா? அவர்கள் கண்கள் பார்த்து, மௌனமாகத் திட்டுங்கள். நண்பர்களைப் பாராட்ட வேண்டுமா? நண்பனைத் தவிர மற்ற வர்களிடம் அவனைப் பற்றி சத்தமாகப் பாராட்டுங்கள்!
................................................................................................................................................................
உலகமே நாடக மேடை. நாமெல்லாம் அதில் நடிகர்கள் என்கிறார்கள். எனக்குத் தரப்பட்டது மோசமான கதாபாத்திரமோ என்னவோ!
................................................................................................................................................................
பெண்கள் பூக்களின் இதழ்களைப் பிய்த்துப் போடுபவர்கள். ஆண்கள் அழகானவற்றைக் கற்பழிப்பவர்கள். நான் இயற்கையை என்றென்றைக்கும் ஆராதிப்பவன். எனக்கு நண்பனோ அல்லது நண்பியோ இல்லை.
நம்புங்கள்!
................................................................................................................................................................
எல்லோரும் பணத்தைச் சம்பாதிக்க ஓடுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!. இன்னும் அதிகமாகச் சேருங்கள். உங்கள் சவப்பெட்டியை உயர்ந்ததாக்கவும், பூக்களால் அலங்கரிக்கவும் அது உதவும்!
................................................................................................................................................................
நிறையத் தோற்பதிலும் வசதி இருக்கிறது. தோற்பவர்களால் மட்டுமே தொடர்ந்தும் கற்றுக் கொள்ள முடிகிறது. வெல்ல ஆரம்பிப்பவர்கள் தான் கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்து விடுகிறார்களே!
................................................................................................................................................................
பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லையா? அழகிய, கலை வேலைப்பாடுள்ள மட்பாண்டத்தில் உள்ள வெறுமை மட்டுமே தெரிகின்றதா? எதன் மீதும் பற்று இல்லையா?
நல்லது.
ஞானம் பெற்றுவிட்டதாக ஞானிகளும், யோகிகளும் சொல்லக் கூடும். நம்பாதீர்கள்.
மரணத்திற்குத் தயாராகி விட்டதாக, ஒருவேளை psychologist சொன்னால் உடனேயே நம்புங்கள்.
.
.
.
Comments
Post a Comment