11/02/2004
இலாபங்கள் நிறைந்தவைதான்காதல் என
எண்ணி இருந்தேன்...
ஆனால்...
பாடித் திரிந்த - என்
பசுமை நாட்களை இழந்தேன்...
இன்னிசை பொழியும் - என்
இரவுகளை இழந்தேன்...
துக்கங்களே தெரியாத - என்
தூக்கத்தை இழந்தேன்...
மகிழ்ச்சியை இழந்தேன்
இறுதியில்
மனதையும் இழந்தேன்.
இழந்தேன்!
அனைத்தையும் இழந்தேன்.
உயிரைத் தவிர
இழப்பதற்கு
ஒன்றுமே இல்லை
என்றான பொழுதுதான்
எனக்குப் புரிந்தது...
காதல் -
முழுக்க முழுக்க
நட்டங்களால் நிரப்பப்பட்ட
அழகிய கண்ணாடிக் குவளை!
.
.
.
Comments
Post a Comment