சுவற்றில்
எறியப்பட்ட
இரப்பர் பந்தைப்
போல
வேகமாய்
வந்து
நெஞ்சில்
தாக்குகின்றது
சிதைந்த காதலும்
கொஞ்சம் தனிமையும்!
கொளுத்திப்
போடப்பட்ட நட்சத்திரம்
வெடிக்காத
வரைக்கும்தான்
நிலவுக்குத் துணையிருக்கும்.
பின்...
நிலவை
கௌவிச் சென்ற மேகம்
அதை
பசியுடன்
விழுங்குவதைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்..
கடைசியாக,
கடதாசிப்
பூக்களில்
வந்தமர்ந்த கருவண்டு
சுவற்றில்
பட,
தன் பிட்டத்திலிருந்து
நாற்றத்துடன்
ஏமாற்றத்தையே
பீச்சுகின்றது...
பெண் கழுதையை
துரத்திய ஆண் கழுதைகளில்
வீரியமான ஒன்று
முன்னையதை
இப்போதைக்கு
புணர்ந்திருக்கும்...
வெறி தீர்ந்தபின் விலகியிருக்கும்.
இறகொடிந்த இரவுப் பறவை
பாவம்!
என்ன செய்யப்போகின்றது?...
பட்டினி
கிடக்கும்
கோரப்பற்களின்
பசி தீர்க்கப்போகிறது!
மரச்
சட்டத்தில்
புதிதாக சிரிக்கின்றது
திருமணப்
புகைப்படம்.
அதன்
கண்ணாடியில் அடைபட்டு
முறைத்துக்
கொண்டிருக்கும்,
நான்
என்கிற மிருகம்
இன்றைக்கு மட்டும்
அவளை ஆடைகளைந்து
அல்லல் படுத்தாது!
.
.
.
Comments
Post a Comment