இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை பாவிக்கும் போது. . . .
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....
மௌனமா இருந்தா மழை வருமோ!
ReplyDeleteநல்ல படைப்பு வாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது
ReplyDeleteசௌந்தர் - நனைத்தது மழை இல்லை அவளின் மௌனம்...
ReplyDeleteநன்றி யாதவன்
ReplyDelete