ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://en.wikipedia.org/wiki/Haiku (நன்றி விக்கிபீடியா)
தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக வகுத்திருப்பார்.
அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-
- சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் / பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும்.
- மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும்.
- முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும்.
- முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும்.
- ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம்.
- அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்திற்கும் உள்ளடங்கக் கூடியது. ஆனால் உள்ளடக்கத்தில் நகைச்சுவையையும், மனித இயல்பு பற்றியும் பிரதானமாகக் கூறவேண்டும்.
என்பதே அவர் வகுத்த இலக்கணமாகும். இதை விட சிறப்பாக யாராலும் விதிமுறைகளை வகுத்து விட முடியாது. எனவே தமிழில் ஹைக்கூ எழுதுபவர்கள் சுஜாதா அவர்கள் வகுத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதுவதே ஒரு மகத்தான படைப்பாளிக்கு நாம் செய்யும் தகுந்த மரியாதை ஆகும்.
*
**
***
**
*
இனி என்னுடைய ஹைக்கூ மற்று சென்றியு கவிதைகள் ......
வாடவில்லை.
மேசையில்
கடதாசிப்பூக்கள்
*
விதைக்காமல்
பழுத்தது
நிலவு
*
தினம் புலம்பெயர்வால்
முகவரி தேடுகிறது
மேகம்
*
நாய்கள் குரைக்கவில்லை.
பாதையில்
இராணுவம்
*
சாயம் போகாமல்
நனைந்தது
வானவில்
*
ஏன் உடல் இளைத்தாய்?
வயதான
கருவாடே!
*
கண்ணாடியில்
அழகியின் விம்பம்.
அழகியின் விம்பம்.
எதிர்காலப் பிணம்!
*
எதிரிக்கு வாழ்த்து அட்டை.
ஒட்டவில்லை
முத்திரை
*
முத்தமிட்டாள் காதலி.
எழும்பவேயில்லை
பிணம்
*
பச்சைக் குழந்தை போல்
உள்ளாடை அணிவதில்லை
வெங்காயம்
*
என் மனத்திரையில்
உன் நினைவலைகளாக
காதல்
*
ஒரு காலை வேளை
பல் துலக்கப்பட்டது
சீப்பு
*
சுதந்திரதின விழாவில்
வழங்கப்பட்டது
கூண்டிலடைத்த வெண்புறா
*
சீக்கிரம் எழுந்து கொள்.
இன்றுனக்கு
தூக்கு.
*
உலக வர்த்தக மையம் முன்னால்
என்னைக் கைது செய்தது
உன் புன்னகை
*
இடுப்பைப் பிடிக்கையில்
சிலிர்க்காதே
வெண்டிக்காயே!
*
சட்டெனக் குதித்தது
நதிக்குள்
நீர் வீழ்ச்சி
*
விபச்சாரி விரும்பவில்லை
பல நிறங்களில்
ரோஜாச் செடியை.
*
கிணற்றைப்போல்
தொட்டிக்குள்ளும்
நிலவு.
*
ஓ நயாகரா!
என்னை நனைத்தது
கண்ணீர்.
.


0 comments:
Post a Comment