Skip to main content

Posts

Showing posts from March, 2021

அதிஷ்டம் -சிறுகதை

      திருக்கைலாயத்திலே இரவு நாடகங்களை முடித்துக் கொண்டு 52 இன்ச் டிவியை அனைத்துவிட்டு படுக்கைக்கு வந்த பார்வதி மிகவும் ஜோசனையில் இருந்த சிவனை பார்த்து "சுவாமி! என்ன பலத்த ஜோசனையில் இருக்கிறீர்களே என்ன விஷயம்" என கேட்டார். "அதொன்றும் இல்லை பாரும்மா, இவன் என்னுடைய அதீத பக்தன் சிவதாசன் இருக்கின்றானே அவன் மகாஜன சம்பத ஒன்றை வாங்கினான். சரி அவனும் கொஞ்சம் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருக்கின்றான் தானே, அதனாலே அவனுக்கு சூப்பர் பரிசு 5 கோடி பணப்பரிசு விழும்படி செய்தேன். சந்தோசத்தில் துள்ளிக் குதித்த அவன், இரவு படத் தட்டிலிலே அவ் டிக்கட்டை வைத்து, கற்பூரம் ஏற்றி கும்பிட்டு விட்டு படுக்கச் சென்றான். காலை எழுந்து பார்த்த போது டிக்கட் தீப் பிடித்து முழுதுமாக எரிந்து விட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போன அவன் என்னை படு மோசமாக திட்டித் தீர்த்து விட்டான். அது தான் மனதுக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது" என்றார். அதற்கு பார்வதி" ஏன் நீங்கள் அந்த டிக்கட் எரிவதை தடுக்கவில்லை பிரபு ?" எனக் கேட்டார். நீண்ட பெருமூச்சொன்றை விட்ட படி சிவன் சொன்னார்" இவனுக்கு 5 கோடி