முதல் நனைப்பிலேயே
முற்றத்து ஜீவன்களை
சுவாச அறைகளில்
இனிக்கச் செய்வதிலும்,
குடையின் உச்சியிலிருந்து
வெள்ளை முத்தாக
நிலம் நோக்கி
பொத்தென விழுவதிலும்,
கண்ணாடிகளின் பரப்புகளை
ஆக்கிரமித்து
நீர் ஓவியங்களை
அங்கங்கே தீட்டிச் செல்வதிலும்,
அழையா நண்பனாகவும்,
அன்பான எதிரியாகவும்,
தகரத்திலும்,
கோப்பைகளிலும்,
வீட்டுக் கூரையிலும்
விதம் விதமாய்
ஓசை செய்வதிலுமாய்....
மழை போடும் வேஷங்களை
பேதமின்றி ரசிக்க முடிகின்றது!
மனம் தோற்றுப் போகும்
நேரங்களில்,
தேற்றிக் கொள்வது
எப்படி என்பது பற்றி - இயற்கை
எனக்குச் சொல்லித் தந்திருக்கின்றது!
.
.
.
Comments
Post a Comment