Skip to main content

நகர வாழ்க்கை






நகர வாழ்க்கையின் பாதியை
நிரம்பி வழியும் பேரூந்துகளும்,
அது சுமக்கும்
வியர்வை நாற்றங்களும்,
எதிர்ப்பு ஊர்வலங்களும்,
சாலை நெரிசல்களுமாய்
சர்வாதிகாரமாக
விளுங்கிக் கொண்டிருக்கின்றன...


கடற்கரை காற்றுக்கும்
வர்த்தகச் சாயம்
பூசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சுத்தமானதாகச் சுவாசிக்க 
கியூவில் நின்று
டிக்கட் எடுக்க வேண்டி வரலாம்...


விளம்பரப் பலகைகளில் தான் 
எத்தனை இளம் பெண்கள்...
உதடுகளில்
உயிர் இல்லாமல்,
உள்ளாடையும் அணியாமல்!


விரைவு உணவுகள்
நாக்கை ஏமாற்றி,
விரைவாகவே
சிறு குடலில் விஷமாகின்றன.
இருந்தும்
விரும்பி  உண்ணப்படுகின்றன!


போட்டி போட்டுக் கொண்டு
வளரும் கட்டடங்கள்
பொருளாதாரத்தைக் கூட்டுகின்றனவாம்...
கட்டடங்களில் நிற்கும்
தொடர்பாடல் கோபுரங்களின்
அலைக் கற்றைகள்  
மனித ஆயுளைக் குறைக்கின்றதே!


குறுஞ்செய்திகளில்
உறுதி செய்யப்படும் காதல்,
ஹோட்டல் அறையில்
கற்பை -
சோதித்துப் பார்க்கச்
சம்மதிக்கின்றது.....


மென்மையை விற்கும் 
உதட்டுச்சாயம் பூசிய 
விபச்சாரப் பெண்களை
பிரத்தியேக சாலைகளில்
உணரலாம்!


சமூக வலைத்தளங்களில்
மூழ்கிக்கிடக்கும் இளந்தலை முறை-
ஆணிடம் பெண்ணாகவும்,
பெண்ணிடம் ஆண்மையானவனாகவும்
ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது!
இவர்களின்
ஆண் குறியை வெட்டினால் தகும்.


புகைவண்டி ஏறி,
கட்டணக் குளியல் போட்டு,
புளித்ததை உண்டு,
அலுவலகம் விரையும்
ஆயிரக் கணக்கானோரையும்
நகரம் உள்வாங்குகின்றது,
ஆனால் கண்டுகொள்வதில்லை!

சொகுசு வாகனங்களில் ,
ஆங்கிலம் பேசி,
பணத்தால் அடிக்கும்
மேல் தட்டு வர்கத்தவரையே
நகரம் மென்மையாகத் தாங்குகின்றது!

நகரம்-
மனம் நிறைவாக,
பணத்தின் தேவை அதிகமற்று,
மனிதத்துடன் வாழ்வதற்கான தகுதியை
எப்போதோ இழந்துவிட்டது!
.
.
           


   








Comments

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

வரமாய் வந்த தேவதை

ஆண் குரல் :  வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்துப்  பொன்வண்டு நீ இதயத்தை அரிக்கும்  சில் வண்டு! கனவுகள் வரைந்த  ஓவியம் நீ கவிஞர்கள் படைத்த  காவியம்! மொட்டுக்கள் விழித்து மலராகும் உன் கூந்தலின் மென்மையை களவாடும்! ** வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டு நீ இதயத்தில் இனிக்கும்  கற்கண்டு! ** உன் உதட்டினில் பிறப்பது சிறு கவிதை அது உடனே மறைவது பெருங்கவலை! இரவுகள் வருவது  எதற்காக? உன்னால் பௌர்ணமி தோற்கணும் அதற்காக! **   வரமாய் வந்த  தேவதை நீ குறும்புகள் செய்யும்  தாமரை! ஈடன் தோட்டத்து  பொன்வண்டே உன் இதயத்தில் எனக்கொரு இடமுண்டா! ** நதிக்குள் குதித்தது நீர்வீழ்ச்சி அதன் காதல் தோல்விக்கு நான் சாட்சி! உன்னருகால் உலகை அழகாக்க என் ஆயுள் முழுக்க நீ வேண்டும்! **   வரமாய் வந்த  தேவதை நீ கு...