Sunday, July 4, 2010

காதலின் மகத்துவம்


பூக்கள் தேனைப் பொழிவது
படைப்பின் மகத்துவம்.
இங்கே...
தேன்துளி ஒன்று
புன்னகைப் பூக்களை
சொரிவது
காதலின் மகத்துவமோ?

மோகனத் தென்றல் வீசும்
என்னவளை நினைக்கையில்
உள்ளம் தீப்பற்றி
உணர்வுகளின் வெப்பம் தாழாது
என் உதடுகளில் கூட
வியர்வைப் பூக்கள்
எட்டிப் பார்க்கின்றதே!

பச்சை,
சிவப்பு,
நீலம்,
கறுப்பென
நிறங்கள் பலவாய் இருக்கலாம் .
என் நெஞ்சில் நிறுவப்பட்ட
காதல் ஒன்று தான்.
காதலி நீ மட்டும் தான்!
.
.
.

No comments:

Post a Comment