தொந்தி கரைய
காலையில் ஓடுபவர்களை
பார்க்கும் போதெல்லாம்
தோன்றுகின்றது.....
ஏழைகளுக்குப் பட்டினி
இவர்களால் தானா?
***
காமம் தழுவி,
அவளை அவிழ்க்கத் துடிக்கும்
என் கண்களைப் பார்த்தாள்
காதலி!
உணர்ந்தேன்.
உடலைத் தின்பது காமம்
உயிரைத் தின்பதே காதல்
என்பதை உணர்ந்தேன்!
உடனேயே மன்னித்தாள் காதலி.
மன்னிக்கவேயில்லை காதல்!
***
பணம் தான்...
காலுக்குக் கீழேயிருந்தால்
நலம்.
இதயத்திற்கு அருகில் வந்தால்
ஆபத்து!
தலைக்கு மேலே போனால்......
ஆழ்ந்த அனுதாபங்கள்!!
***
Comments
Post a Comment