உனக்கும் எனக்குமிடையிலான
தேநீர் வேளைகளை
நான் அதிகம் நேசிக்கின்றேன்...
காதற்ற தேநீர்க் குவளையை
நீ நீட்டும் போது
உன் கைவிரல்கள் தொடாமல்தான்
வாங்கப் பார்க்கின்றேன்.
மீறியும் பட்டால்
முறைக்காதே.
என் தவறு ஏதுமில்லை.
இரும்பைக் கவர்வது
இரும்பைக் கவர்வது
காந்தத்தின் இயல்புதானே....
நீ தரும் தேநீர்
உள் நாக்கில் தித்திக்கும்.
உன் கூந்தல் வாசம்
என் உயிரோடு கலக்கும்.
நம் இயல்பான
பேச்சுக்களின் இடையே
உன் கண்கள்
என் கண்களை
என் கண்களை
வேறு உலகத்திற்கு
இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல்
தடுமாறி, நொருங்கி
உன் தேநீர்க் குவளைக்குள்
விழும் என்னை
சட்டென எடுத்துக் குடிப்பாய்.
நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை
உன் கடைவாயில் ஒட்டியிருக்கும்
காதல்தான் சொல்ல வேண்டும்!
.
.
அருமை
ReplyDelete