Skip to main content

Posts

மைக்ரோ கவிதைகள் - 02

நாமெல்லோரும் பாதுகாப்பதாக நினைத்து உள்ளங்கைக்குள் ஒரு அழகான பட்டாம் பூச்சியை எப்போதுமே அடைத்து வைத்திருக்கின்றோம். அந்தப்பட்டாம்பூச்சி - நம் வாழ்க்கை! அதை அழுத்திக் கொல்வதும் அன்றி சுதந்திரமாக பறக்க விடுவதும் அவரவர் இஷ்டம்! இறக்கை ஒடிந்த பலரின் பட்டாம்பூச்சிகள் பறக்க முயற்சிப்பதை பார்த்திருக்கின்றேன். ஆனால்..... அவை பறப்பதேயில்லை!! ***** நீண்ட வரண்ட கோடைக்குப் பிறகு  வாழ்க்கையை  நேசிக்க ஆரம்பிக்கையில் .......... அவ்வளவு அழகானதாகவும்,  அர்த்தமுள்ளதாகவும்  படுகின்றது வாழ்க்கை! காதலால் தொலைத்ததை நட்பினால் பெறல்.....  குற்றமல்ல! . . .

மைக்ரோ கவிதைகள்

வானத்தெருவில் கொட்டியிருக்கும் நட்சத்திர அரிசியை கொத்தித் தின்னும் இரவுக் குருவியை எங்கே  இன்னும் காணோமே ????? ***** மேகத்தின் பொக்கற்றுக்குள் இருந்து நழுவிக்கொண்டிருக்கின்றது நிலவு. எப்போது விழுமோ.... ஏந்தக் காத்துக்கொண்டிருக்கின்றேன். ***** மாம்பழம், பலாப்பழம், பப்பாப்பழம் கூட உணவு மேசையில் உள்ளது. ஆனாலும் புளிக்கும் திராட்சையே ஏனோ பிடித்திருக்கின்றது. ***** தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் உயிரினத்தின் அடிப்படைத் தேவைகள். அதுகூட கிடைக்காதவர்களுக்கு என்னுடைய சிபாரிசு ... காதல்! காதலியுங்கள். நல்ல பெண்களைக் காதலியுங்கள்! ***** . . .

தேநீர் வேளை

உனக்கும் எனக்குமிடையிலான தேநீர் வேளைகளை நான் அதிகம் நேசிக்கின்றேன்... காதற்ற தேநீர்க் குவளையை நீ நீட்டும் போது உன் கைவிரல்கள் தொடாமல்தான் வாங்கப் பார்க்கின்றேன். மீறியும் பட்டால் முறைக்காதே. என் தவறு ஏதுமில்லை. இரும்பைக் கவர்வது காந்தத்தின் இயல்புதானே.... நீ தரும் தேநீர் உள் நாக்கில் தித்திக்கும். உன் கூந்தல் வாசம் என் உயிரோடு கலக்கும். நம் இயல்பான பேச்சுக்களின் இடையே உன் கண்கள்  என் கண்களை வேறு உலகத்திற்கு இட்டுச்செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறி, நொருங்கி உன் தேநீர்க் குவளைக்குள் விழும் என்னை சட்டென எடுத்துக் குடிப்பாய். நீ விரும்பித்தான் குடித்தாயா என்பதை உன் கடைவாயில் ஒட்டியிருக்கும் காதல்தான் சொல்ல வேண்டும்! . .

3 கவிதக

தொந்தி கரைய காலையில் ஓடுபவர்களை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகின்றது..... ஏழைகளுக்குப் பட்டினி இவர்களால் தானா? *** காமம் தழுவி, அவளை அவிழ்க்கத் துடிக்கும் என் கண்களைப் பார்த்தாள்  காதலி! உணர்ந்தேன். உடலைத் தின்பது காமம் உயிரைத் தின்பதே காதல் என்பதை  உணர்ந்தேன்! உடனேயே மன்னித்தாள் காதலி. மன்னிக்கவேயில்லை காதல்! *** பணம் தான்... காலுக்குக் கீழேயிருந்தால் நலம். இதயத்திற்கு அருகில் வந்தால் ஆபத்து! தலைக்கு மேலே போனால்...... ஆழ்ந்த அனுதாபங்கள்!! ***

நகர வாழ்க்கை

நகர வாழ்க்கையின் பாதியை நிரம்பி வழியும் பேரூந்துகளும் , அது சுமக்கும் வியர்வை நாற்றங்களும் , எதிர்ப்பு ஊர்வலங்களும், சாலை நெரிசல்களுமாய் சர்வாதிகாரமாக விளுங்கிக் கொண்டிருக்கின்றன... கடற்கரை காற்றுக்கும் வர்த்தகச் சாயம் பூசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சுத்தமானதாகச் சுவாசிக்க   கியூவில் நின்று டிக்கட் எடுக்க வேண்டி வரலாம்... விளம்பரப் பலகைகளில் தான்   எத்தனை இளம் பெண்கள்... உதடுகளில் உயிர் இல்லாமல் , உள்ளாடையும் அணியாமல்! விரைவு உணவுகள் நாக்கை ஏமாற்றி , விரைவாகவே சிறு குடலில் விஷமாகின்றன. இருந்தும் விரும்பி  உண்ணப்படுகின்றன! போட்டி போட்டுக் கொண்டு வளரும் கட்டடங்கள் பொருளாதாரத்தைக் கூட்டுகின்றனவாம்... கட்டடங்களில் நிற்கும் தொடர்பாடல் கோபுரங்களின் அலைக் கற்றைகள்   மனித ஆயுளைக் குறைக்கின்றதே! குறுஞ்செய்திகளில் உறுதி செய்யப்படும் காதல் , ஹோட்டல் அறையில் கற்பை - சோதித்துப் பார்க்கச் சம்மதிக்கின்றது..... மென்மையை விற்கும்   உதட்டுச்சாயம் பூசிய  விபச்சாரப்...

இயற்கை வைத்தியம்

முதல் நனைப்பிலேயே முற்றத்து ஜீவன்களை சுவாச அறைகளில் இனிக்கச் செய்வதிலும், குடையின் உச்சியிலிருந்து வெள்ளை முத்தாக நிலம் நோக்கி பொத்தென விழுவதிலும், கண்ணாடிகளின் பரப்புகளை ஆக்கிரமித்து நீர் ஓவியங்களை அங்கங்கே தீட்டிச் செல்வதிலும், அழையா நண்பனாகவும், அன்பான எதிரியாகவும், தகரத்திலும், கோப்பைகளிலும், வீட்டுக் கூரையிலும் விதம் விதமாய் ஓசை செய்வதிலுமாய்.... மழை போடும் வேஷங்களை பேதமின்றி ரசிக்க முடிகின்றது! மனம் தோற்றுப் போகும் நேரங்களில், தேற்றிக் கொள்வது எப்படி என்பது பற்றி - இயற்கை எனக்குச் சொல்லித் தந்திருக்கின்றது! . . .

ஐயோ பாம்பூ!

மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே கணினியின் சித்து விளையாட்டுப் புரிந்துவிடும். இப்படித் தான் சமீப காலமாக இலங்கையில், அதுவும் வட மாகாணத்திலே இது போன்ற மாய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் பொக்கணைப் பகுதியில் பிடிபட்டதாகச் சொல்லி, photoshop மூலமோ அன்றி வேறு software  மூலமாகவோ வடிவமைக்கப்பட்ட ஐந்து தலை நாகத்தைப் பற்றி அதிகம் பேசப்பட்ட்டது. கீளே உள்ள படத்தைப் பார்க்கவும். நன்றாக உற்றுப் பார்த்தால் அதில் உள்ள சூட்சுமங்கள் தெரிந்துவிடும். அட அட, என்ன அழகாக போட்டோவிற்குப் போஸ் கொடுக்கிறது பாருங்கள். “ என்னை அழகாகக் கிளிக் செய். நானுனக்கு வைரம் தருகிறேன்” என்று பாம்பு சொல்லியிருக்குமோ? இப்படம் பொய்யானது என்பதற்கான காரணங்கள் : * இப்படத்தில் காணப்படும் பாம்பின் நிழல் ஒருதலைப் பாம்பிற்குரியது.  (ஒருதலைப் பாம்பின் படத்தை எடிட் செய்திருக்கிறார்கள்) *  இப்படம் (ஒரு தலைப் பாம்பு) தேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞனால் எடுக்கப்பட்ட படம் என்பது அதன் தரத்திலேயே தெரிகின்றது.(இந்தப் பதிவில் இப்படத்தை இணைக்கும் போது அதன் தரம் சற்றுக் குறைந்து விட்டது ) டிஸ்கவரி நிகழ்ச்சிகளிலெல்லாம...