Skip to main content
வசந்தம் வருகிறது
போகிறது...
வரட்சி வருகிறது
போகிறது...
தலைவன்
வருகிறான் போகிறான் ...
எப்போதும் போலவே
மக்கள் -
சிரித்து
அழுது
புசித்து
புணர்ந்து ...
வாழ்கிறார்கள்.
அவர்களில்
நல்லவர்கள், கெட்டவர்கள்
என்பதை
அவரவர் பசியின் அளவே
தீர்மானிக்கிறது.
ஆம் மக்கள் வெறும் மக்கள் தான்!
.
.
ம்ம்ம்ம்.... அருமை சகோதரா..
ReplyDelete@ பி.அமல்ராஜ்...
ReplyDeleteநன்றி அண்ணா.