Skip to main content

பிதற்றல்!



யதார்த்தப் பள்ளங்கள்.
கால் இடறி விழி பிதுங்கும்
சம்பவச் சாக்கடைகள்.

முறைத்துப் போகிறது
முறைதவறிப்போன
மூங்கில் காற்று.

ஊர்ந்து திரியும்
மேகம்
ஊர் மாறி வந்த
கள்ளத் தோணி.

புன்னகைக்கும் பூக்கள்
கற்புள்ள கண்ணகிகளா?
மாசற்றதாம் நிலவு!
புணர்ச்சிப் பள்ளங்கள்
புலப்படுவதில்லையா?

மாலைச் சூரியன்
மன்மதன் போலும்...
கடலுடன் தான்
அதற்குக் காதலுண்டே?

பேப்பரும் இருந்து
பேனாவும் கிடைப்பதால்...
ஏதாவது,
எதையாவது
எழுத நினைத்து,
இயற்கை,
இலக்கணப் பாரம்பரியங்களை
இதழ் மூடி முத்தித்து,
பிதற்றிய பிலாக்கினங்களை
கவிதை என மார்தட்டிக் கொள்ளும்
திருகு தாளங்களுக்கெல்லாம்
எங்குதான் இடமுண்டு?
காதலைத் தவிர!
.
.
.

Comments

  1. ம்ம்ம்... நல்லாயிருக்கு..

    மாலைச் சூரியன்
    மன்மதன் போலும்...
    கடலுடன் தான்
    அதற்குக் காதலுண்டே...

    பேப்பரும் இருந்து
    பேனாவும் கிடைப்பதால்...
    ஏதாவது,
    எதையாவது
    எழுத நினைத்து,
    இயற்கை,
    இலக்கணப் பாரம்பரியங்களை
    இதழ் மூடி முத்தித்து,
    பிதற்றிய பிலாக்கினங்களை
    கவிதை என மார்தட்டிக் கொள்ளும்
    திருகு தாளங்களுக்கெல்லாம்
    எங்குதான் இடமுண்டு?
    காதலைத் தவிர!
    .

    ReplyDelete
  2. நன்றி செந்தில் குமார்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முற்றத்தில் ஒரு தனிமை

இரவு ஏழு மணிக்கெல்லாம் ஏதும் எழுதச் சொல்கிறது  தனிமை. தனிமை கூட ஒருவகையில் மருத்துவம் தான். சோகமான பொழுதுகளில் சுகம் தருகிறதே? தனிமை - எப்பொழுதும் சக்தி மிக்கது! சூரியனின் தனிமை சுட்டெரிக்கிறது. நிலவின் தனிமை அழகில் மிக்கது. தாஜ்மஹாலின் தனிமை காதலை ஆள்கிறது. பாகற்காய் போன்றது தனிமை. அவ்வப் போது சேர்த்துக் கொண்டால் ஆயுளுக்கும் நல்லது. பின்னிரவுப் பொழுதுகளில் பிரகாசம் குறையும் போது தாலாட்டவும் செய்கிறதே தனிமை. தனிமை ஒரு கொடை தான். திகட்டாத வகையில் - அதை  பாவிக்கும் போது. . . .

என் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)

ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்  http://en.wikipedia.org/wiki/Haiku  (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக   வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :-  சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் /  பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவ...

நண்பனின் காதலி!

07/03/2005 என் இனிய நண்பா! நாளுக்கு நான்கு வேளை  உன் இடக்கை இரு விரலுக்குள்  புகைக்கும் முத்தம் இடும்  சிகரட்டைப் பற்றிப் பேசுகிறேன்! ரசித்து, ருசித்து, புகைப்பாய்... வட்டமாய்,  சதுரமாய்,  கோள வடிவமுமாய் வகை வகையாய் புகை விடுவாய். உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை... என்றார்கள்; என்பார்கள்! நீ சிகரட் என்றவுடனே  எப்பிடிப் பற்றிக் கொள்கிறது பார் - என் வயிறு... வாங்கத் தருவது நான் தானே? இனி ஒரு போதும் இல்லை  இதுவே இறுதி -  உன் சத்தியம்  மறுநாளே தகர்ந்துபோக  தீர்மானங்கள் தொடரும்... நீ நண்பனானது எத்தனை விசித்திரம்.. எனக்கும்  சிகரட்டுக்கும்... சிகரட் உனக்கு கோயில். எனக்கோ குப்பை! எனக்குத் தெரியும்  உன் விரல்களால்  சிகரட்டைத் துப்பி எறிய முடியாது! என்னிலிருந்து பிரிக்க முடியாத  காதலைப் போல... சிகரட்டுக்கும் காதலுக்கும்  ஒற்றுமை கேள்... சிகரட் - பற்றவைத்துப் புகைக்கையில்  நெருங்கி வரும் மரணம்... காதல் - பற்றிக்கொண்டால் ...