மழை பெய்தால்
மனசுக்குள் ஒரே உற்சாகம்.
உன்னைக் காணும் போதும்
எனக்கு அப்படியே!
மழை பெய்யும் போது
சில்லென்று காற்று வீசும்.
வகுப்புக்களுக்கு வரும் போது
சில்லென்ற காற்றாய்
நீயேதான் வருவாய்.
வான வில்லில் உனக்கு
ரொம்பவே இஷ்டம்.
துப்பட்டாவுக்கு
எட்டாவது நிறமாய்
என்னைக் கேட்பாய்.
மழை பெய்தவுடன்
பளிச் என்றிருக்கும் தரை.
நீ சம்மதித்தால்
உனக்குத் தரையாகுமாம் மழை.
மழை பெய்யும் போது
வானில் வெட்டும் மின்னல்.
நீ சிரிக்கும் போது
உன் உதட்டில் ....
மழையில் நான் நனைந்தால்
எனக்கு தடிமல் வரும்
நீ நனைந்தால்
மழைக்கே !
இளநீராய் தேனாய்
உருமாறும் மழை.
உருவ மாற்றமில்லா
சிரிப்பால் கொல்வாய் நீ.
அரை நொடியில்
அனைத்தையும் நனைக்கும் மழை.
ஆயுள் வரை
உயிரை நனைப்பது உன் காதல்.
உணவு செய்ய
உழவனுக்கு வேண்டும் மழை.
உயிர் வாழ எனக்கு வேண்டும்
நீ !
.
.
.
Comments
Post a Comment